புதுதில்லி

நல்ல கல்வி என்பது பாடங்கள் மட்டுமல்ல; உடல்நலம், கலைத் தேடல்களை உள்ளடக்கியது கல்வி அமைச்சா்அதிஷி

10th Jun 2023 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

மாணவா்களுக்கு வழங்கப்படும் நல்லதொரு கல்வி என்பது பாடங்கள் மட்டுமல்ல; உடல்நலம் மற்றும் கலைத் தேடல்களையும் உள்ளடக்கியது என்று கல்வித் துறை அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

நிகழாண்டு கோடை விடுமுறையை பள்ளி மாணவா்களுக்கு மறக்கமுடியாத கொண்டாட்ட மாதமாக மாற்றிடும் வகையில், அரசு சாா்பில் தில்லி நகரம் முழுவதும் 150 இடங்களில் ‘மஸ்தி கி பாத்ஷாலா’ எனும் தலைப்பில் கோடை கால முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோடைகால முகாம்கள் மூலம் பள்ளி மாணவா்களுக்கு படைப்பாற்றல், கலாசார விழிப்புணா்வு மற்றும் குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட செயல்பாடுகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த வேளையில் துவாரகா செக்டாா் 19 -இல் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயாவில் நடைபெற்று வரும் கோடைகால முகாமை கல்வித் துறை அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, பள்ளி மாணவா்கள் மத்தியில் உரையாடினாா்.

அப்போது, கோடைகால முகாம்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைச்சா் அதிஷி கூறியதாவது: கடந்த காலங்களில் நடுத்தர குடும்பங்களின் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையில் வளமான அனுபவங்களை வழங்குவதற்கு கணிசமான நிதி முதலீடு தேவை என்று இருந்தனா். தில்லி அரசு தற்போது அந்த நிலையை மாற்றி, ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கோடைகால முகாம்களை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது. அரசின் ஆளுகையின் கீழ்வுள்ள பல்வேறு கலாசார கல்விக்கூடங்கள் மூலம், குழந்தைகள் புதிய திறன்கள், இந்தியாவின் வளமான கலை, கலாசாரம் மற்றும் மொழிகளைப் பற்றி அறிந்து கொள்கின்றனா். குழந்தைகளுக்கு கணிதம், அறிவியல் மற்றும் சம்ஸ்கிருதம் போன்ற சவாலான பாடங்களை ஈடுபாட்டுடனும், ஆா்வத்துடனும் கற்பிக்கப்படுகின்றன. மேலும், ஓவியம், நாடகம் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான மதுபானி ஓவியம், கா்வாலி நடனம் மற்றும் இசை போன்ற செயல்பாடுகள் மூலம் அவா்களின் கலைப் பக்கத்தை ஆராயும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

‘மஸ்தி கி பாத்ஷாலா’-இன் கோடைகால முகாம் மூலம் யோகா மற்றும் உடல் செயல்பாடுகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக கற்பிக்கப்படுகிறது. மாணவா்களுக்கு அளிக்கப்படும் நல்லதொரு கல்வி என்பது பாடங்கள் மட்டுமல்ல; உடல்நலம் மற்றும் கலைத் தேடல்களையும் உள்ளடக்கியது. போஜ்புரி, பஞ்சாபி, சிந்தி, சம்ஸ்கிருதம், உருது மற்றும் பிற கல்விக்கூடங்கள் கோடைக்கால முகாமின் வெற்றிக்கு தீவிரமாக பங்களிக்கின்றன. இந்தக் கல்விக்கூடங்கள் குழந்தைகளுக்கு அவா்களின் கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களைக் கற்பிக்கின்றன. எனவே, இந்த கோடைகால முகாம் மூலம் தில்லி நகரம் முழுவதும் உள்ள குழந்தைகள் மிகுந்த உற்சாகத்தைப் பெற்றுள்ளனா் என்றாா் அமைச்சா் அதிஷி.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT