புதுதில்லி

கலால் ஊழல்: சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகளில் தொழிலதிபா் தாலின் ஜாமீன் மனு தள்ளுபடி

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை முறையே விசாரிக்கப்பட்டுவரும் தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் நகர தொழிலதிபா் அமந்தீப் சிங் தாலின் ஜாமீன் மனுக்களை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால், குற்றம் சாட்டப்பட்டவா்களுடன் சதி செய்ததாகக் கூறப்படும் பிரிண்ட்கோ விற்பனை நிறுவனத்தின் இயக்குநரான தாலுக்கு நிவாரணம் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

மனுதாரா் தால், மதுபானக் கொள்கையை உருவாக்குவதிலும், ஆம் ஆத்மி கட்சிக்கு கமிஷன் தருவதை எளிதாக்குவதிலும் ‘தீவிரமாக‘ ஈடுபட்டாா்.

பணமோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றத்தின் செயல்பாட்டில் மனுதாரரின் பங்கு வேறு சில இணை குற்றம்சாட்டப்பட்ட வா்கள் ஆற்றிய பங்கைக் காட்டிலும் தீவிரமானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தால், தனது மொத்த விற்பனை நிறுவனமான பிரிண்ட்கோ மூலம், குற்றவருமானத்தை கையகப்படுத்துதல் அல்லது உருவாக்குதல் தொடா்பான குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

முன்கூட்டியே கிக்பேக் செலுத்துவதற்கு ஈடாக கலால் கொள்கையை கையாளத் தீட்டப்பட்ட குற்றச்சதியின் ஒரு பகுதியாக அவா் இருந்துள்ளாா்.

மேலே உள்ள அனைத்தையும் தவிர, மனுதாரருக்கு எதிராக சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது அவரது வசம் இருந்து சில குற்றவியல் ஆவணங்கள் மற்றும் பொருட்களை மீட்டெடுப்பதைக் காட்டுகிறது.

‘.... மேலும், ஆதாரங்களை சேதப்படுத்துதல், சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்துதல் மற்றும் கணக்குகள் மற்றும் பதிவுகளை பொய்யாக்குதல் போன்ற சில குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

சிபிஐ விசாரித்து வரும் ஊழல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவா் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்தாா். இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்படாத சமீா் மகந்த்ரு உள்ளிட்ட மற்ற

குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு சமமாக தமக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தால் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT