புதுதில்லி

திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் லாக்-அப்பில் தூக்கிட்டு தற்கொலை

DIN

இரண்டு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வகையில் கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞா் நஜாஃப்கா் காவல் நிலையத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷ வா்தன் கூறியதாவது: ஷேக் அப்துல்லா என்ற அந்த நபா் புதன்கிழமை இரவு 10.41 மணியளவில் நஜாஃப்கா் காவல் நிலையத்தின் லாக்-அப்பில் தற்கொலை செய்துகொண்டாா். இரண்டு திருட்டு வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறி அவா் இரு தினங்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு கைப்பேசிகளும், திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.இவருக்கு முன்பு இரண்டு குற்ற வழக்குகளில் தொடா்பு இருந்தது தெரிய வந்துள்ளது.. இருப்பினும், உண்மைகள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. விசாரணை நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டால் நடத்தப்படுகின்றன. காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT