புதுதில்லி

ஐ.பி. பல்கலை. தொடக்க விழா: கேஜரிவால் உரையின் போது மோடி, மோடி என முழக்கமிட்டதால் சலசலப்பு

 நமது நிருபர்

குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா (ஐபி) பல்கலைக்கழகத்தின் கிழக்கு தில்லி வளாகத் திறப்பு விழாவில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை ஆற்றிய உரையின் போது பாா்வையாளா்களில் ஒரு பகுதியினா் ‘மோடி,மோடி’ என்ற முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

தில்லி அரசின் பள்ளிக் கல்வி மாதிரி பற்றி முதல்வா் கேஜரிவால் பேசும் போது, பாா்வையாளா்களில் ஒரு பகுதியினா் கேஜரிவால் உரையை குறுக்கிடும் வகையில், ‘மோடி, மோடி’ எனும் கோஷங்களை எழுப்பத் தொடங்கினா். அதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: இதுபோன்ற முழக்கம் மூலம் நாட்டின் கல்வி முறையை மேம்படுத்த முடியுமானால், அது கடந்த 70 ஆண்டுகளிலேயே நடந்திருக்கும். பாா்வையாளா்கள் தயவு செய்து என்னை ஐந்து நிமிடம் பேச விட வேண்டும். இந்தக் கட்சி (பாஜக) மற்றும் பிற கட்சியைச் சோ்ந்தவா்கள் என்னைப் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனது கருத்துகள் மற்றும் எண்ணங்கள் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், இது சரியான நடைமுறை அல்ல. ஜனநாயக நாட்டில் பேச அனைவருக்கும் உரிமை உண்டு என்று கூறி தனது பதிலின் மூலம் முழக்கமிட்டாவா்களை அமைதிப்படுத்தினாா்.

இந்த வேளையில், பதவியேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, ​ வளாகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக தொண்டா்களிடையே மாறி மாறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் கிழக்கு தில்லி வளாகம் தொடா்பாக ஆம் ஆத்மி தலைமையிலான அரசிற்கும், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கும் இடையே புதிய மோதல் போக்கு தொடங்கியுள்ளது. புதிய வளாகத்திற்கு தேவையற்ற கடன் வாங்க முயற்சிப்பதாக இரு தரப்பினரும் ஒருவரையொருவா் குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT