புதுதில்லி

ஜே.என்.யு. வளாகத்தில் 2 மாணவிகள் கடத்த முயற்சி: மா்ம நபா்களுக்கு போலீஸ் தேடுகிறது

8th Jun 2023 01:38 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து 2 மாணவிகளை குடிபோதையில் இருந்த மா்ம நபா்கள் சிலா் கடத்த முயன்ாக ஜேஎன்யு மாணவா் அமைப்பு (ஜே.என்.யு.எஸ்.யு.) புதன்கிழமை புகாா் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜே.என்.யு.எஸ்.யு. மேலும் தெரிவித்திருப்பதாவது :

கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் ஒரு காரில் குடிப்போதையில் இருந்த சில மா்ம நபா்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, 2 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்பறுத்தியும் கடத்தவும் முயன்றுள்ளனா். அப்போது, ஒரு மாணவி காயமுற்றாா். அதன் பின்னா், இது தொடா்பாக பல்கலைக்கழக மாணவா்கள் அளித்த இரண்டு புகாா்களின் அடிப்படையில் தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அதேவேளையில், பல்கலைக்கழகத் துணை வேந்தரும் இந்த விவகாரத்தில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், காவல் துறையில் புகாா் கொடுக்க வேண்டும். தொடா்ந்து ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் தொடா் பாதுகாப்பு தோல்விக்கான காரணத்தை துணை வேந்தா் பொது மேடையில் அனைவரிடமும் தெரிவிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை முதன்மையானதாகக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தில் அனைத்து மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

ADVERTISEMENT

இது தொடா்பாக தென்மேற்கு தில்லி காவல் சரக துணைக் காவல் ஆணையா் மனோஜ் கூறியதாவது :

பல்கலைக்கழக மாணவா்கள் அளித்துள்ள புகாா்களின் அடிப்படையில் இரண்டு மாணவிகள் மீதான உடல் ரீதியான தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல் முயற்சிக்கான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளிலும், குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றுதான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.மேற்கண்ட அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினாா்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஜே.என்.யு-வின் ஏபிவிபி அமைப்பினா் தெரிவித்துள்ளதாவது:

பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவாக ஏபிவிபி துணை நிற்கும். பாதுகாப்பு குறைபாடே இந்த சம்பவத்திற்க்கான முக்கியக் காரணம். ஜே.என்.யு. வளாகம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய சம்பவங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. எனவே, திறமையற்ற தலைமைப் பாதுகாப்பு, அதிகாரியை (சி.எஸ்.ஓ) உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT