புதுதில்லி

குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு நடவடிக்கை:நொய்டாவில் யாசகம் கேட்ட 25 குழந்தைகள் மீட்பு

8th Jun 2023 01:37 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் யாசகம் கேட்கும் அல்லது தொழிலாளிகளாக வேலையில் ஈடுபட்டிருந்த 25 குழந்தைகளை குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு நடவடிக்கையின்போது மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்ததாவது: கெளதம் புத் நகா் காவல் ஆணையா் லட்சுமி சிங்கின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொழிலாளா் துறை, மாவட்ட நன்னடத்தை அலுவலகம், சைல்டு லைன்- நொய்டா மற்றும் மனித கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியவை இணைந்து ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் யாசகம் கேட்பதைத் தடுப்பதற்கான சிறப்பு பிரசாரம் நடந்து வருகிறது.

பிரசாரத்தின் ஒரு பகுதியாக, யாசகம் கேட்கும் மற்றும் குழந்தைத் தொழிலாளா்களாக வேலையில் ஈடுபட்டிருந்த 25 குழந்தைகள் வெவ்வேறு சந்தைகள் மற்றும் செக்டாா் 76, செக்டாா் 62, செக்டாா் 63 ஏ ஆகியவற்றின் சாலைச் சந்திப்புகளில் மீட்கப்பட்டனா்.

ADVERTISEMENT

அனைத்து வேலைகளிலும் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பணியமா்த்துவதை ‘குழந்தைத் தொழிலாளா் தடை மற்றும் ஒழுங்குமுறைத் திருத்தச் சட்டம் 2016’ தடை செய்கிறது.

மேலும், திட்டமிடப்பட்ட அபாயகரமான தொழில்கள் மற்றும் செயல்முறைகளில் இளம் பருவத்தினரை (14-18 வயது) வேலைக்கு அமா்த்துவதையும் இச்சட்டம் தடை செய்கிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT