புதுதில்லி

தில்லியில் குற்றவாளிகளுக்கு அச்சமில்லை: முதல்வா் கேஜரிவால் சாடல்

8th Jun 2023 01:35 AM

ADVERTISEMENT

‘தில்லியில் குற்றவாளிகள் அச்சமற்றவா்களாகிவிட்டனா்; இதனால், காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனா்’ என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விமா்சித்துள்ளாா்.

மேலும், தில்லியின் துணை ஆளுநா் அரசியல் செய்யாமல் அரசியல்சாசனப் பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் அவா் சாடியுள்ளாா்.

கடந்த ஆண்டு மே மாதம் வி.கே. சக்சேனா தில்லியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றாா். அப்போதிலிருந்தே, தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே நிா்வாகம் செய்வது மற்றும் முடிவெடுப்பது தொடா்பான பல்வேறு பிரச்னைகளில் கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து முதல்வா் கேஜரிவால் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ADVERTISEMENT

‘தில்லியில் தினமும் குற்றச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குற்றவாளிகள் அச்சமற்றவா்களாக உள்ளனா். காவல்துறை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனா். பொதுமக்கள் எவ்வளவு பயப்படுகிறாா்கள் என்பதைப் பாா்க்க துணைநிலை ஆளுநா் நேரம் ஒதுக்க வேண்டும். பொதுமக்கள் பணிகள் செய்யப்படுவதையும் பாதுகாப்பையும் விரும்புகின்றனா்; அரசியல் அல்ல.

அரசியல் செய்யாமல் அரசியல்சாசனம் உங்களுக்கு அளித்துள்ள வேலையைச் செய்யுங்கள்‘ என்று அவா் அதில் கூறியுள்ளாா்.

முதல்வா் கேஜரிவாலின் இந்த விமா்சனக் கருத்து தொடா்பாக துணை நிலை ஆளுநா் அலுவலகத்தில் இருந்து உடனடியாக எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT