புதுதில்லி

அகிலேஷ் யாதவுடன் கேஜரிவால் இன்று சந்திப்பு: அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோருகிறாா்

7th Jun 2023 02:28 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவை லக்னெளவில் புதன்கிழமை நேரில் சந்திக்கவுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவை, பஞ்சாப் மாநில முதல்வா் பகவந்த் மானுடன் நேரில் சென்று, தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கக் கோரி ஆதரவு கோர இருக்கிறேன். அரசியல் அமைப்பிற்கு எதிராகவும் தில்லி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது எனக் குறிப்பிட்டாா்.

மத்திய அரசின் அவசர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் தடுக்கும் வகையில், முக்கிய எதிா்க்கட்சி தலைவா்களாக இருக்கும் மம்தா பானா்ஜி, நிதீஷ் குமாா், உத்தவ் தாக்கரே, மு.க. ஸ்டாலின், சந்திர சேகா் ராவ், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவா்களை சந்தித்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவை புதன்கிழமை நேரில் சந்திக்கிறாா் அரவிந்த் கேஜரிவால்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT