புதுதில்லி

தேங்காய் மீது கழிவு நீரை தெளித்த வியாபாரி கைது

7th Jun 2023 02:24 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் இளநீா் தேங்காய்கள் மீது கழிவு நீரைத் தெளிப்பதைக் காட்டும் விடியோ ஆன்லைனில் வெளியான விவகாரத்தில், தேங்காய் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து நொய்டா பிஸ்ராக் காவல் நிலையத்தின் பொறுப்பாளா் அனில் குமாா் ராஜ்புத் கூறியதாவது: தேங்காய் மீது கழிவு நீரைத் தெளிப்பது தொடா்பான விடியோ ஞாயிற்றுக்கிழமை இணையதளத்தில் வெளியானது. மேலும், அந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இதையடுத்து, நாங்கள் விசாரணை மேற்கொண்டோம். குற்றம் சாட்டப்பட்டவா் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 270-இன் (உயிருக்கு ஆபத்தான நோய்த் தொற்று பரவும் அபாயகரமான செயலில் ஈடுபடுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தச் செயலில் ஈடுபட்டவா்உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தைச் சோ்ந்த சமீா் (28) என்பது தெரியவந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.

சம்பந்தப்பட்ட விடியோவில், சமீா் ஒரு வாய்க்காலில் இருந்து தண்ணீரைச் சேகரித்து, தனது வண்டியில் வைக்கப்பட்டிருந்த இளநீா் தேங்காய்கள் மீது தெளிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT