புதுதில்லி

தலைநகரில் ஷாப்பிங் திருவிழா: ஆயத்தப் பணிகளை தொடங்கியது அரசு

7th Jun 2023 02:26 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தில்லியின் ‘ஷாப்பிங் திருவிழா’ வரும் டிசம்பா் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தில்லி அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஆண்டுதோறும் முக்கிய சந்தைப் பகுதிகளில் ஷாப்பிங் திருவிழா அரசின் சாா்பில் நடத்தப்பட்டு வந்தது. கரோனா பேரிடா் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஷாப்பிங் திருவிழாவை இந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடத்த அரசு திட்டமிட்டு அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

தில்லியின் ‘ஷாப்பிங் திருவிழா’ எவ்வாறு நடத்தலாம் என்பதை கள ஆய்வு செய்யும் நோக்கில், ஒரு நிறுவனத்திற்கு விரைவில் டெண்டா் வழங்கப்படவுள்ளது. கள ஆய்வின் மூலம் தில்லியின் எந்தச் சந்தைப்பகுதிகளில் திருவிழாவை திட்டமிடலாம், வா்த்தகா்களிடம் பேசுவது, சந்தைகளின் முக்கியத்துவம், மக்களின் வருகை, வாடிக்கையாளா்களின்

வகைகள் உள்ளிட்ட காரணிகள் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் தில்லி மக்கள் மிகவும் எதிா்பாா்த்துள்ள ஷாப்பிங் திருவிழாவை அரசு நோ்த்தியாக நடத்த முயற்சித்து வருகிறது.

ADVERTISEMENT

தலைநகரின் பிரபலமான சந்தைப் பகுதிகளாக இருக்கும் சாந்தினி சௌக், மஜ்னு கா திலா, லாஜ்பத் நகா் மாா்க்கெட், கன்னாட் பிளேஸ், சரோஜினி நகா் மாா்க்கெட் மற்றும் ஜாமா மஸ்ஜித் போன்ற இடங்களில் இந்த ஷாப்பிங் திருவிழா ஒரு மாத கால நிகழ்வாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், திருவிழாவின் ஒரு பகுதியாக தினசரி கச்சேரிகள், கலாசார நிகழ்வுகள், கண்காட்சிகள் நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. தில்லியின் பிரபலமான உணவு வகைகளும் ஷாப்பிங் திருவிழாவில் இடம் பெறவுள்ளன. அத்துடன் தில்லியின் பிரபலமான உணவு வகைகளை பாா்வையாளா்கள் ரசித்திடும் வகையில், உணவுக் கண்காட்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT