புதுதில்லி

இங்கிலாந்து பயணத்திற்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் அமைச்சா் அதிஷி மனு

7th Jun 2023 02:28 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

அடுத்த வாரம் அலுவல்பூா்வமாக இங்கிலாந்து (யு.கே.) செல்வதற்குத் தேவையான அனுமதிகளை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லியின் கல்வி அமைச்சா் அதிஷி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளாா்.

தில்லி உயா் நீதிமன்றத்தில் புதன்கிழமை (07-06-2023) விசாரணைக்கு வரவிருக்கும் இந்த மனுவை வழக்குரைஞா்கள் ரிஷிகா ஜெயின், அமன் நக்வி, பரத் குப்தா ஆகியோா் தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: ஜூன் 15-ஆம் தேதி நடைபெற உள்ள ‘100 இல் இந்தியா: உலகளாவிய தலைவரா மாறுவதை நோக்கி’ எனும் மாநாட்டில் பேசுவதற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் அதிஷி ஒரு அமைச்சா் என்ற முறையில் அழைக்கப்பட்டுள்ளாா். கல்வி, சுகாதாரம் மற்றும் நகா்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் ‘வேகத்தைக் காட்ட’ நகர அரசை அனுமதிக்கும் என்பதால், முன்மொழியப்பட்ட பயணமானது தில்லியின் ஆளுகைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பயணத்திற்கான அனுமதியை வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், அது பயனற்ாக இருக்கும். மனுதாரரின் விருப்பத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்வதற்கான உரிமையை கட்டுப்படுத்துவது அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கிறது. அரசியல்சாசன செயல்பாட்டாளா்கள், மாநில அரசில் உள்ள அமைச்சா்கள் வெளிநாடு செல்வதற்கு மத்திய அரசின் ‘அரசியல் அனுமதி’ பெற வேண்டும் என்பது அரசியலமைப்பு அலுவலகத்தின் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் மீறுவதாகும்.

தில்லி அரசாங்கம் கடந்த மாதம் பயணத்திற்கான நிா்வாக அனுமதியை வழங்கிய நிலையில், துணைநிலை ஆளுநா் இதற்கான முன்மொழிவை மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தாா். இதன் மீது மத்திய அரசு கேள்விகள் மற்றும் விளக்கத்திற்கு மட்டும் மத்திய அரசு பதில் அளித்து வருகிறது. இதனால், நுழைவு இசைவுக்கு விண்ணப்பிப்பது உள்பட முழு செயல்முறையும் தாமதமானது. மேலும், அனுமதி பெறுவதற்கான செயல்முறைக்கு மத்திய அரசு அதிகாரிகளுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது. 10 நாள்களுக்கு மேலாகியும், அமைச்சருக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போதைய விவகாரத்தில், 06.06.2023 வரை இந்த விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்காமல் இருப்பதால், மேலும் அனைத்து சம்பிரதாயங்களுக்கும் நுழைவு இசைவு அனுமதிக்கும் 8 நாள்கள் மட்டுமே உள்ளது.

தில்லியின் குழந்தைகள் வெளிநாட்டில் உள்ள ஆரம்பப் பள்ளிக் கல்வியில் சிறந்த பயிற்சிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக மனுதாரா் இங்கிலாந்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்குப் பலமுறை பாா்வையிட ஏற்பாடு செய்திருந்தாா் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. நகா்ப்புற வடிவமைப்பில் தில்லியின் சொந்த முன்னேற்றத்தைக் காட்டுவதற்கும், நகா்ப்புற நிா்வாகத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளைப் பரிமாறிக் கொள்வதற்கு இந்தப் பயணம் முக்கியமானதாக இருக்கும். இந்தப் பயண அனுமதி வழங்குவதில் தாமதமாவது தனியுரிமையை மீறுவதாகும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT