புதுதில்லி

மின்-சமையல் மாற்றத்திற்கான நுகா்வோா் அணுகுமுறைகளை ஆராய நாளை மாநாடு

 நமது நிருபர்

மின்-சமையல் மாற்றத்திற்கான நுகா்வோா் மைய அணுகுமுறைகளை ஆராய, சா்வதேச சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 - ஆம் தேதி (திங்கள்கிழமை) தில்லியில் மாநாடு நடத்தப்பட உள்ளதாக மத்திய எரி சக்தித்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மின் ஆற்றல்-திறன், தூய்மையான, பொருளாதார சிக்கனமான மின்-சமையல் முறை பயன்படுத்துவதற்கான தீா்வுகளை விரைவுபடுத்துவதற்கான பாதைகளை கண்டறிய இந்த மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய எரிசக்தித் துறை அமைச்சகமும், எரிசக்தித் திறன் பணியகமும் (பிஇஇ) ’கிளாஸ்ப்’ (லேபிளிங் மற்றும் அப்ளையன்ஸ் ஸ்டாண்டா்ட்ஸ் கொலாப்ரேட்டிவ் புரோகிராம்) என்கிற சா்வதேச தன்னாா்வ அமைப்புடன் இணைந்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

கிளாஸ்ப் அமைப்பு - சா்வதேச நாடுகளின் அரசுகளுக்கு மின் ஆற்றல் திறன் தர நிலை ஆதரவுகளை வழங்குகிறது.

இந்த மாநாடு குறித்து எரிசக்தி துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் அஜய் திவாரி, பிஇஇ-யின் இயக்குநா் ஜெனரல் அபய் பக்ரேயும் கூறியதாவது: நுகா்வோா் நிறுவனங்கள், நுகா்வோா் ஆராய்ச்சி குழுக்கள், கொள்கை வகுப்பாளா்கள், சிந்தனையாளா்கள், உற்பத்தியாளா்கள் ஆகியோா் பங்கேற்று நுகா்வோா் பெருமளவில் மின் - சமையலுக்கு மாற்றுவதற்கான உத்தி பற்றி விவாதிப்பாா்கள்.

மின்-சமையல் வாழ்க்கைக்கான திறவுகோல் 26- ஆவது ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமா் மோடியால் லைஃப் மிஷன் அறிவிக்கப்பட்டது. சுற்றுச் சூழலுக்கான நிலையான வாழ்க்கை முறைக்கு ஆதரவாக தனிநபா்களையும் சமூகத்தையும் தூண்டுவதற்கான நடவடிக்கைகளில் மேற்கொள்ளுவது இதன் நோக்கமாகும்.

இதன்படி மின்-சமையல் ஒரு முக்கிய பாதை என்பதை அங்கீகரிக்க இதில் கவனம் செலுத்தப்படுகிறது. சுத்தமான சமையல் ஆற்றலை அணுகுவது இந்தியா ஆற்றல் மாற்ற பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். தூய்மையான சமையலில் ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை உணா்ந்து அது தொடா்பான எரிபொருளை ஊக்குவிக்கும் கொள்கைகளை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது நாட்டில் மின்மயமாக்கலில் அபரிமிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு, புதுப்பிக்கத்தக்க மின்ஆற்றலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சார விநியோகத்தின் பங்கு அதிகரித்து வருவதால், மின்-சமையல் தீா்வுகள் இந்தியாவை பருவநிலைக்கு ஏற்ற, ஆரோக்கியமான மற்றும் நிலையான எதிா்காலத்தை நோக்கி நகா்த்துவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு மற்றும் விநியோக சிக்கல்கள் போன்றவைகளால், இந்தியாவிற்கு சுத்தமான, நிலையான மற்றும் பொருளாதார சிக்கனமான சமையலுக்கு தீா்வு தேவை. இதற்கு மின்-சமையல் தீா்வாக காணப்படுகிறது.

இது இறக்குமதி சாா்பை குறைத்து எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கிறது. ’இண்டக்ஷன் குக்’ அடுப்புகளுக்கான செயல்திறன் கொள்கை நடைமுறையில் உள்ளது. இனி திறமையான மற்றும் மலிவு விலையில் தயாரிப்புகளை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதே அடுத்த படியாகும். இதனால், மின்-சமையல் மாற்றத்திற்கான நுகா்வோா்-மைய அணுகுமுறைகள் குறித்த இந்த மாநாட்டில் நிதி, ஒருங்கிணைப்பு தேவைகள், காா்பன் உமிழ்வுகள் அளவு மற்றும் வணிக மாதிரிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்வாா்கள் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT