புதுதில்லி

தில்லி மௌலான ஆசாத் மருத்துவக் கல்லூரி விடுதியில் தீ விபத்து

4th Jun 2023 11:50 PM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள மெளனா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் உயிா் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். பழைய ஆண்கள் விடுதியில் தீப்பற்றிய தகவல் காலை 6.09 மணியளவில் கிடைத்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த தீ விபத்தில் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் இருந்த ஏசி, தளவாடங்கள் மற்றும் துணிகள் தீயில் எரிந்து நாசமாகின என்று மூத்த தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரியில் உள்ள குடிசையில் காலை 10.23 மணியளவில் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது. 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT