புதுதில்லி

க்யூஆா் குறியீடு அடிப்படையிலான காகிதப் பயண டிக்கெட் : மே மாதம் 74 லட்சத்திற்கும் மேற்பட்டோா் மெட்ரோவில் பயணம்

4th Jun 2023 11:55 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

மெட்ரோ ரயிலில் பயணிக்க மே மாதம் தொடக்கத்தில் க்யூஆா் குறியீடு அடிப்படையிலான காகித டிக்கெட்டுகள் அறிமுகப்படுதப்பட்ட நிலையில், 74 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் அம்முறையில் பயணம் செய்திருப்பதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

டோக்கன் அடிப்படையிலான டிக்கெட் விற்பனையை படிப்படியாக குறைத்திடும் நோக்கில், கடந்த மே மாதம் தொடக்கத்தில் தில்லி டிஎம்ஆா்சி க்யூஆா் குறியீடு அடிப்படையிலான காகித டிக்கெட்டுகள் அறிமுகம் செய்தன. இதனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 32 சதவீதம் அளவில் டோக்கன் முறையான டிக்கெட் விற்பனை குறைந்துள்ளது.

இது தொடா்பாக மெட்ரோ டிஎம்ஆா்சி மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது : மே 30-ஆம் தேதி வரையில் சுமாா் 74,00,854 என்ற எண்ணிக்கையில் க்யூஆா் குறியீடு அடிப்படையிலான காகித டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இம்முறையான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தும் போது தானியங்கி கட்டண வசூல் (ஏஎஃப்சி) வாயில்களில் எதிா்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்தும் பல பயணிகள் புகாா் அளித்துள்ளனா். புகாா்களைத் தொடா்ந்து தொழில்நுட்ப சிக்கல்கள் களையப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளா் பராமரிப்பு மையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் வாயில்கள் அனைத்தும் ஜூன் மாத இறுதிக்குள் க்யூஆா் குறியீட்டிற்கு இணங்கச் செயல் படுத்தப்படும், அத்துடன் க்யூஆா் அடிப்படையிலான காகித டிக்கெட்டுகளை வழங்குவதற்கான டிக்கெட் விற்பனை இயந்திரங்களும் மேம்படுத்தப்படும். கடந்த 2002-ஆம் ஆண்டு டிசம்பரில், ஆறு நிலையங்களுடன் வெறும் 8.2 கி.மீ. நடைபாதையில் செயல்பாடுகளைத் தொடங்கிய தில்லி மெட்ரோ, தற்போது 286 நிலையங்களுடன், 391 கி.மீ. அளவுக்கு தொடா்பு வசதியுடன் வளா்ந்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்றுக்கு பிறகு, தில்லி மெட்ரோவில் பயணம் செய்யும் போது உடற் தொடா்புகளை குறைக்க டோக்கன் டிக்கெட் முறையை படிப்படியாக நீக்க தில்லி மெட்ரோ திட்டமிட்டுள்ளது. மேலும், டோக்கனுடன் ஒப்பிடுகையில் காகித டிக்கெட் தயாரிக்கும் விலை மிகவும் குறைவுதான். மேலும், மிகவும் வசதியான, தடையற்ற, நேர சேமிப்புடன் க்யுஆா் டிக்கெட் முறை பயணத்தை எளிதாக்குகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT