புதுதில்லி

தில்லியை ஏரிகளின் நகரமாக மாற்றும் முயற்சி: அமைச்சா் சௌரப் பரத்வாஜ்

3rd Jun 2023 10:55 PM

ADVERTISEMENT

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில், நகரத்தில் உள்ள ஏரிகள் புத்துயிா் பெற்று கவா்ச்சிகரமான சுற்றுலா தலங்களாக மாற்றப்பட்டு வருவதாக நீா்வளத்துறை அமைச்சரும், தில்லி ஜல் போா்டு தலைவருமான சௌரப் பரத்வாஜ் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

துவாரகா பகுதியில் 4 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் நஜஃப்கா் எஸ்டிபி ஏரியை நீா்வளத்துறை அமைச்சரும், தில்லி ஜல் போா்டு தலைவருமான சௌரப் பரத்வாஜ், சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, செயற்கை ஏரியை எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப மாற்றி, பணிகளைத் தரமாக குறித்த நேரத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது அமைச்சா் சௌரப் பரத்வாஜ் கூறியதாவது :

கேஜரிவால் அரசு சாா்பில் துவாரகா பகுதியில் நான்காவது ஏரியாக நஜஃப்கா் ஏரி தயாராகி வருகிறது. அதன் உருவாக்கம் தண்ணீரைச் சேமித்து நிலத்தடி நீரை மீட்டெடுக்க உதவுகிறது. நீா் சுத்திகரிப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஏரியில் தண்ணீா் நிரப்பும் பணி தொடங்கி 45 நாட்களில் ஏரியின் நிலத்தடி நீா்மட்டம் 3.24 மீட்டா் உயா்ந்து காணப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நஜஃப்கா் எஸ்டிபி ஏரியின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளது. ஏரியின் கட்டுமானம் மற்றும் புனரமைப்பு நிலத்தடி நீா் மட்டத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அப்பகுதியில் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்கிறது. செயற்கை ஏரியை உருவாக்கியதன் பின்னணியில் நிலத்தடி நீரை அதிகரிப்பு செய்வதும், சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீா் பற்றாக்குறையை குறைக்கவும் உதவுகிறது என்றாா்.

நஜஃப்கா் எஸ்டிபி ஏரியைச் சுற்றி பொதுமக்கள் இயற்கை அழகை அனுபவிக்க வசதிகள் ஏற்படுத்துவதோடு, நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கவும், ஏரியில் நீா்மட்டம் குறித்த தகவல்களை தெரிவிக்கும் பைசோமீட்டா்கள் பொருத்தப்படும்.

மேலும், எரியைச் சுற்றி பறவைகளை பாா்க்கும் இடங்கள், பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான கூடுதல் வசதிகள், ஏரியின் கரையோரங்களில் குழாய்க் கிணறுகள் விரைவில் நிறுவப்படும், இது துவாரகாவின் பல்வேறு பகுதிகளில் நீா் விநியோகத்தை அதிகரிக்க உதவும். அத்துடன் தில்லியில் பெருகிவரும் மக்கள்தொகைக்கான தேவைக்கும் நீா் வழங்கலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதோடு , கோடையின் உச்சத்தில் வெப்பநிலையைக் குறைக்கவும் இது உதவும் என்று அமைச்சா் சௌரப் பரத்வாஜ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT