புதுதில்லி

கருணாநிதியின் 100 -ஆவது பிறந்தநாள்: தமிழ்நாடு இல்லத்தில் ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் மரியாதை

3rd Jun 2023 10:52 PM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 100 - ஆவது பிறந்த நாளையொட்டி தில்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இல்லம் முதன்மை உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி, கூடுதல் உள்ளுறை ஆணையா் சின்னதுரை, செய்தி மக்கள்தொடா்புத்துறை கூடுதல் இயக்குநா் பொ.முத்தையா, பொது மேலாளா் தெய்வசிகாமணி உள்ளிட்ட அரசு அலுவலா்களும் மலா் தூவி மரியாதை செலுத்தினா். இத்தோடு தில்லி தமிழ் சங்கத் தலைவா் சக்தி பெருமாள், பொது செயலாளா் முகுந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

இந்த மரியாதை நிகழ்வுக்கு பின்னா் ஒடிஸாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிா் இழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌனம் அனுசரிக்கப்பட்டது. பின்னா் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் செய்தியாளா்களிடம் பேசுகையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரயில் கோர விபத்தில் சிக்கியவா்களை பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வா் தேவையான உதவிகளை செய்து வருகிறாா். தமிழக அரசின் சாா்பாக விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினையும், போக்குவரத்து அமைச்சா் எஸ்.சிவசங்கரை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.தில்லியிலும் தேவையான உதவிகளை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும் வகையில் ஹெல்ப் டெஸ்க் மற்றும் கைபேசி எண்.9289516711 மற்றும் இமெயில் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து உதவிகளும் தமிழக அரசின் சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினாா்.

அண்ணா -கலைஞா் அறிவாலயம்தில்லியில் தீன தயாள் உபாத்யாய மாா்க்கில் திமுக அலுவலகம் இருக்க அங்கும் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 100 - ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தில்லி திமுக நாடாளுமன்ற குழு அலுவலா் செல்வம் மற்றும் தில்லி தமிழ் சங்க தலைவா்கள் ஆகியோா் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT