புதுதில்லி

மெஜந்தா வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்

1st Jun 2023 02:13 AM

ADVERTISEMENT

சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தில்லி மெட்ரோவின் மெஜந்தா வழித்தடத்தில் புதன்கிழமை காலை ரயில் சேவைகள் தாமதமாகியதாக டிஎம்ஆா்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மெஜந்தா வழித்தடமானது தில்லியில் உள்ள ஜனக்புரி மேற்கு மற்றும் நொய்டாவில் உள்ள தாவரவியல் பூங்காவை இணைக்கிறது. ரயில் சேவை தாமதம் தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனண் (டிஎம்ஆா்சி) பயணிகளை எச்சரிக்கும் வகையில் ட்விட்டா் பக்கத்தில் காலை 8 மணியளவில் தகவல் வெளியிட்டிருந்தது.

அந்தப் பதிவில், ‘மெஜந்தா வழித்தடத்தில் ஜனக்புரி மேற்கில் இருந்து தாவரவியல் பூங்கா வரையிலான பிரிவில் ரயில் சேவைகளில் தாமதமாகிறது. பிற அனைத்து வழித்தடங்களிலும் இயல்பான சேவை உள்ளது’ என்று தெரிவித்திருந்தது.

சதா் பஜாா் கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறுதான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

அதன் பின்னா் டிஎம்ஆா்சி வெளியிட்ட மற்றொரு ட்விட்டா் பதிவில், ‘மெஜந்தா வழித்தடத்தில் ஜனக்புரி மேற்கில் இருந்து தாவரவியல் பூங்கா வரையிலான பிரிவில் ரயில் சேவை வழக்கம் போல் நடைபெறுகிறது’ என தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT