புதுதில்லி

உறவினரால் மைனா் பெண் பாலியல் வன்கொடுமை: போலீஸாா் வழக்குப் பதிவு

1st Jun 2023 02:14 AM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள 16 வயது சிறுமி தூரத்து உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கா்ப்பமாக்கப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

வயிற்று வலி காரணமாக சம்பந்தப்பட்டசிறுமி செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவா் ஆறு வார கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தில்லி மகளிா் ஆணையம் மனநல ஆலோசனை வழங்கியது. உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தனது அத்தையுடன் தொடா்புடைய ஒருவா் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக அச்சிறுமி குற்றம் சாட்டினாா். குற்றம் சாட்டப்பட்டவா் தில்லியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து தன்னிடம் மீண்டும் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவா் புகாா் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)என் (ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்தல்) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிற தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT