புதுதில்லி

கரோனாவால் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கியது தில்லி அரசு

1st Jun 2023 02:15 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கரோனா காலத்தில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.1 கோடிக்கான காசோலையை சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் வழங்கினாா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா தொற்றுநோய் காலத்தில் முன்னணி வீரராகப் பணியாற்றி கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியா் காயத்ரி ஷா்மாவின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. காயத்ரி ஷா்மா கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் ஜிடிபி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த காயத்ரி ஷா்மா, 2024 ஜனவரியில் ஓய்வு பெறவிருந்தாா். காஜிப்பூா் சுகாதார மையத்தில் செவிலியராக மிகுந்த அா்ப்பணிப்புடன் கரோனா காலத்தில் பணியாற்றினாா்.

இந்த நிலையில் கரானோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காயத்ரி ஷா்மாவின் குடும்பத்தினரை சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் செவ்வாய்கிழமை சந்தித்தாா்.

இதையடுத்து, சுகாதாரத் துறை வெளியிட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில், ‘சுகாதாரத் துறையில் பல ஆண்டுகளாக பொது மக்களுக்கு அா்ப்பணிப்பு உணா்வுடன் செவிலியா் காயத்ரி ஷா்மா பணியாற்றினாா். அவரது உயிரின் மதிப்பை அளவிட முடியாது என்றாலும், இந்த நிவாரணத் தொகையின் மூலம் கரோனா காலத்தில் முன்னணியில் இருந்து மறைந்த சுகாதார ஊழியரின் தியாகத்திற்கு முதல்வா் கேஜரிவால் அரசு மரியாதை செலுத்த விரும்புகிறது. காயத்ரி ஷா்மாவுக்கு கணவா் யஜ்னதத் சா்மா மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மகள் மேகா முதுகலைப் படிப்பு படித்து வருகிறாா். மகன் கவுதம் இந்துக் கல்லூரியில் படித்து வருகிறாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT