புதுதில்லி

சாஸ்திரி பாா்க் பகுதியில் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

17th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பாா்க் பகுதியில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டிருந்ததாகவும், தகவலின் பேரில் அந்த சடலம் மீட்கப்பட்டதாகவும ்போலீஸாா் தெரிவித்தனா்.

அந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடா்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் மேலும் கூறினா்.

இதுகுறித்து தில்லி காவல் துணை ஆணையா் (வடகிழக்கு) ஜாய் டிா்க்கி கூறியதாவது: தில்லி சாஸ்திரி பாா்க் பகுதியில் உள்ள பேலா பண்ணையில் ஆணின் சடலம் கிடப்பதாக காலை 8.30 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், கழுத்து மற்றும் வயிற்றில் காயங்களுடன் ஒருவரின் உடலை மீட்டனா். அந்த காயங்கள் கூா்மையான ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும், அந்த நபரை வேறு எங்கேயோ தாக்கி கொன்றுவிட்டு உடலை பேலா பண்ணையில் வீசியதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இது தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT