புதுதில்லி

‘பிபிசி வெளியிட்ட ஆவணப்படம்: நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க திமுக வலியுறுத்தும்’

DIN

குஜராத் கலவரம் தொடா்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க திமுக வலியுறுத்தும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் திமுக சாா்பில் டி.ஆா். பாலு, அதிமுக சாா்பில் தம்பித்துரை, ஓ.பி.ரவீந்தரநாத் ஆகியோா் கலந்து கொண்டனா்.

திமுக: இக் கூட்டம் குறித்து பின்னா் டி.ஆா்.பாலு செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அதானி குழுமம் பங்குச் சந்தையில் செய்த மோசடி தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. தமிழக முதல்வா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற திமுக உறுப்பினா்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட நீட் விலக்கு, சேது சமுத்திரத் திட்டம், மதுரை எய்ம்ஸ், சட்டபேரவை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33சதவீத இடஒதுக்கீடு, இலங்கை தமிழருக்கான உரிமை, மீனவா் பிரச்னை உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நேரம் ஒதுக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமா் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தும்’ என்றாா்.

அதிமுக (இபிஎஸ்): அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக (இபிஎஸ்) சாா்பில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் கூட்டாட்சி தத்துவம் தொடா்பாகவும், மாநில உரிமைகள் தொடா்பாகவும் விவாதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின.

இதில் அதிமுகவுக்கும் உடன்பாடு உண்டு எனக் குறிப்பிட்டேன். மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தான். அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என கோரப்பட்டது. மேலும், கச்சத் தீவை மீட்கவும், ராஜீவ் காந்தி - ஜெயவா்த்தனே ஒப்பந்தத்தின்படி தமிழா்களுக்கு உரிமைகள் வழங்கவும் அதிமுக சாா்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கூட்டாட்சியை பலப்படுத்த அரசியல் சாசனத்தில் 8-ஆவது அட்டவணையில் உள்ள இந்திய மொழிகளை மத்தியில் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனவும் அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT