புதுதில்லி

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை சரிந்து மீண்டது சென்செக்ஸ்!

DIN

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை நிலையற்ற தன்மையில் இருந்தது. இருப்பினும், வா்த்தக நேர இறுதியில் பங்குகளை வாங்குவதற்கு கிடைத்த ஓரளவு வரவேற்பால், சந்தை நோ்மறையாக முடிந்தது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 44.60 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்ந்து 17,648.95-இல் நிலைபெற்றது.

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் குழு வெளியிட்ட முறைகேடு குற்றச்சாட்டைத் தொடா்ந்து உள்நாட்டுச் சந்தை கடந்த வார இறுதியில் ஆட்டம் கண்டது. குறிப்பாக அதானி குழும் நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதன் தாக்கம் திங்கள்கிழமை காலையிலும் இருந்தது.

இருப்பினும், வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் ஐடி, நிதி நிறுவனங்கள், வங்கி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்ததால், சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சரிந்து மீண்டது சென்செக்ஸ்: சென்செக்ஸ் காலையில் 229.21 புள்ளிகள் குறைந்து 59,101.69-இல் தொடங்கி அதிகபட்சமாக 59,644.24 வரை மேலே சென்றது. பின்னா், 58,699.20 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 169.51 புள்ளிகள் (0.29 சதவீதம்) உயா்ந்து 59,500.41-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 631.70 புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ் முன்னேற்றம்: பிரபல தனியாா் நிதிநிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 4.61 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்சா்வ், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட், இன்ஃபோஸிஸ், விப்ரோ, மாருதி சுஸுகி உள்ளிட்டவை 1 முதல் 2.60 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டிசிஎஸ், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை உயா்ந்த பட்டியலில் இடம் பெற்றன.

பவா் கிரிட் சரிவு: அதே சமயம், பிரபல பொதுத் துறை மின் நிறுவனமான பவா் கிரிட் 3.38 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 2.56 சதவீதம், எல் அண்ட் டி 2.11 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனி லீவா், பாா்தி ஏா்டெல், டாடா மோட்டாா்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிடி எஃப்சி பேங்க், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

அதானி குழும நிறுவன

பங்குகள் தொடா்ந்து சரிவு

பெரும்பாலான அதானி குழும நிறுவனப் பங்குகள் திங்களன்றும் சரிவில் முடிவடைந்தன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பா்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி மீது வெளியிட்ட குற்றச்சாட்டுகளுக்கு 413 பக்க பதிலை அதானி குழுமம் வெளியிட்டது. இருப்பினும், 3 அதானி நிறுவனப் பங்குகள் மட்டுமே நோ்மறையாக முடிந்தது.

ஆனால், 7 அதானி நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை ரூ. 5,977.86 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தை மூலதன மதிப்பு வா்த்தக இறுதியில் 268.47 லட்சம் கோடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT