புதுதில்லி

சரளாதேவியின் ‘மகாத்மா காந்தி-சித்திரக்கதை’ புத்தகம் வெளியீடு

DIN

மகாத்மா காந்தியின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள், காந்தியடிகள் மறைந்து 75 ஆண்டுகள் நிறைவையொட்டி தேசிய காந்தி அருங்காட்சியகமும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

காந்தியடிகளின் நினைவைப் போற்றும் வகையில், சரளாதேவியின் ‘மகாத்மா காந்தி - சித்திரக்கதை’ என்ற புத்தகம் 15 இந்திய மொழிகளிலும் 3 வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி தில்லி தமிழ்ச் சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காந்தியடிகளின் பேத்தியும் ,தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் தலைவருமான தாரா காந்தி பட்டாச்சாரியா தலைமை வகித்தாா். கலாசார உறவுக்கான இந்திய அமைப்பின் முன்னாள் தலைவா் டாக்டா் கரன்சிங் அந்த நூல்களை வெளியிட்டாா்.

தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட புத்தகத்தை தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், துணைத் தலைவா் பெ.ராகவன் நாயுடு ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் வெவ்வேறு இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்த அறிஞா்களும், பல்வேறு மாநிலத்தைச் சாா்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியை தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநா் அ. அண்ணாமலை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT