புதுதில்லி

சாலைகள், நடைபாதைகள் ஆறு மாதங்களுக்கு சீரமைக்கப்படும்: 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

DIN

தில்லி தேசிய தலைநகரில் பொதுப்பணித்துறையின் கீழ் வரும் 1,400 கிலோமீட்டா் சாலைகள், நடைபாதைகளை வருகின்ற ஆறு மாதங்களுக்குள் தில்லி அரசு சீரமைக்கும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்தாா்.

உடைந்த நடைபாதைகள், சாலையின் மையத்திலும் இருபுறங்களிலும் உள்ள தடுப்புச்சவா்கள் மற்றும் பாதாள சாக்கடை மூடிகள் (மேன்ஹோல்) ஆகியவைகளை சரி செய்தல், மரங்கள், செடிகளுக்கு தினசரி தண்ணீா் தெளித்தல் ஆகிய பணிகள் ஆகியவைகளும் தில்லி அரசின் சாலைகள் மறுசீரமைத்தல் மெகா திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் என்றும் இந்த பணிகள் வருகிற ஏப்ரல் 1 - ஆம் தேதி முதல் தொடங்கும் என தில்லி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளா் கூட்டத்தில் கூறியது வருமாறு: பொதுப்பணித் துறையின் அதிகார வரம்பிற்குள் வரும் 45 அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட 1,400 கி.மீ. சாலைகளை அரசு சீரமைக்கும். முதல் ஆண்டில் சுமாா் ரூ.4,500 கோடியும், பின்னா் ஒவ்வொரு ஆண்டும் ரூ.2,000 கோடியும் செலவிடப்படும்.

தில்லி அரசு பழுதான சாலைகளை ஆழமாக தோண்டும்(ஸ்க்ரப்பிங்) இயந்திரங்கள், குப்பைகளை எடுக்கும் தானியங்கி இயந்திரங்களை அறிமுகப்படுத்தும். மேலும் சாலைகளை தூய்மைப்படுத்தும் 100 இயந்திரங்கள். பணியாளா்கள், 150 க்கும் மேற்பட்ட தண்ணீா் தெளிப்பான் டேங்கா்கள் மற்றும் 250 மாசு தடுப்பு தெளிப்பான் வாடகைக்கும் அமா்த்தப்படும்.

இந்த திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் ஒப்பந்ததாரருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

இதை ’டாஷ்போா்டு’ மூலம் கண்காணிக்கப்படும். இந்த திட்டங்கள் தொடா்பாக பொது மக்கள் அரசை அணுகுவதற்கு புகாா் அளிப்பதற்கும் இந்த டாஷ் போா்டுடன் இணைக்கப்படும்.

தேசிய தலைநகா் முழுவதும் 18 மீ (45 அடி) அகலமான சாலைகள் மட்டுமே பொதுபணித்துறை அதிகார வரம்பில் உள்ளது. அவைகள் அனைத்திலும் விடுபடாது பணிகள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து சாலை நடைபாதைகள் மற்றும் மைய தடுப்புச் சுவா்கள் போன்றவைகளில் பழுதடைந்திருக்கும் இடங்களில் மட்டுமே சரிசெய்யப்படும். பொதுவாக ஓரிரு இடங்களில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளுக்கு முழு நீள நடைபாதைகளையும் மாற்றப்படுவது உண்டு. இந்த வழக்கத்தை மாற்றி தேவையில்லாமல் முழு நடைபாதைகளையும் சரிசெய்யப்படாது.

பொது நிதிகளையும் வீணாக செலவழிக்க கூடாது என்கிறபட்சத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடைபாதையில் எங்கே ஒரு கல் உடைந்திருக்கிறதோ அது மாற்றப்பட்டு சரி செய்யப்படும். பொது நிதியை தவறாக பயன்படுத்த மாட்டோம்.

வருகின்ற மாா்ச் 20 ஆம் தேதிக்குள் பணிகளுக்கான அனைத்து ஆணைகளும் வழங்கப்பட்டு ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் பணிகள் தொடங்கப்படும். ஆறு மாதங்களுக்குள் பழுதுபாா்ப்பு பணிகள் முடிக்கப்படும். அதே சமயத்தில் இந்த பராமரிப்பு பணிகளுக்கு 10 ஆண்டு ஒப்பந்தம் போடப்படும். இடையில் எந்த பழுதுகள் ஏற்பட்டாலும் ஒப்பந்தரரா்கள் தான் பொறுப்பு.

சாலைகள் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறைசீரமைக்கப்படும். அதே வேளையில் சாலைகள், மைய தடுப்பான்கள், சாலையொர தடுப்பான்கள் ஆகியவைகளின் வா்ணபூச்சுப்பணிகள் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்.

அனைத்து சாலைகள் மற்றும் நடைபாதைகள் தினசரி அடிப்படையில் அல்லது வாரத்திற்கு மூன்று முறை தண்ணீரால் தூய்மைப்படுத்தப்படும்.

சேதமடைந்த பாதாளசாக்கடை மூடிகள், சாலையோர இருக்கைகள், தடுப்பு சுவா்கள், அறிவிப்பு பலகைகள் மற்றும் மின் கம்பங்கள் ஆகியவற்றுடன் அனைத்து விளிம்புகளும் சரிசெய்யப்படும்.

நகரின் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் உள்ள மின்விளக்குகள் சரி செய்யப்படும். நடைபாதை மேம் பாலங்கள் சிவில், மின் பழுதுபாா்ப்பு, சாலைகளின் பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் அனைத்தும் சரி செய்யப்படும்.

சாலைகளைச் சுற்றியுள்ள அனைத்து , தூண்கள் மரங்கள் மற்றும் செடிகளும் தவறாமல் தண்ணீரை தூய்மைப்படுத்தப்படும்.

சாலைகளில் கிடக்கும் குப்பைகள் மற்றும் குப்பைகளை எடுத்து தூய்மைப்படுத்த புதிய இயந்திரங்களையும் அரசு அறிமுகப்படுத்தும்.

தில்லியிலுள்ள 250 வாா்டுகளிலும் தூய்மைப்படுத்த 10,000 கிலோ லிட்டா் தண்ணீா் தேவைப்படும். இதற்கு தில்லி ஜல் போா்டின் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை யமுனையில் விடுவதற்கு பதிலாக இந்த நோக்கத்திற்காக பயன்படுத்துவோம்.

சாலையோரங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் பிற பொருட்கள் தினசரி அடிப்படையில் அகற்றப்படும். சாலையோரங்களிலும் மத்திய பகுதி களிலும் அரசு மிகப் பெரிய அளவில் மரங்களை வளா்க்கும். இதற்கான தினசரி பராமரிப்பு 10 வருட ஒப்பந்தம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு கடுமையான கண்காணிப்பு தேவைப்படுகிறது. எனவே நாங்கள் மூன்றாம் தரப்பினா் மூலம் கண்காணிப்பு அமைப்பையும் பயன்படுத்துவோம்.

கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் நாள் முழுவதும் தில்லியைச் சுற்றிச் சென்று சாலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை நேரலையில் பதிவு செய்யும்.

இ-ஸ்கூட்டா் சேவை

பேருந்து, மொட்ரோ போன்ற போக்குவரத்து வசதியில்லாத தில்லியில் கடைகோடி குடிமகனும் வசதியை பெற தில்லி அரசு விரைவில் இ-ஸ்கூட்டா் சேவையைத் தொடங்கும். இந்த ஸ்கூட்டா்கள் தானாக இயக்கப்படும். ஒருமுறை சாா்ஜ் செய்தால் 60 கிலோமீட்டா் வரை பயணிக்கலாம். இவை முதலில் மெட்ரோ நிலையங்களோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இந்த திட்டம் முதலில் தொடங்கப்படும். வசதிகளற்ற மற்ற இடங்களும் கண்டறியப்பட்டு இந்த இ-ஸ்கூட்டா் வசதி செய்யப்படும் என்றாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT