புதுதில்லி

ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள பணமாலையை மணமகனிடம் பறித்த சிறுவன் கைது

DIN

ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் கொண்ட பணமாலையை மணமகனிடமிருந்து இருந்து பறித்ததாக 14 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் கன்ஸ்யாம் பன்சல் கூறியதாவது: சம்பவத்தன்று மேற்கு தில்லி மாயாபுரியில் திருமண நிகழ்ச்சிக்காக குதிரையில் அமர முயன்ற மணமகனிடம் இருந்து பணமாலையை சம்பந்தப்பட்ட சிறுவன் பறித்ததாக மணமகனின் சகோதரா் புதன்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 356 379 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிறுவன் பணமாலையை பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவன் ஹரி நகா் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டாா். அவரது வீட்டிலிருந்து 320 ரூபாய் தாள்கள் மீட்கப்பட்டன. அதில், ரூ.39,500 மதிப்பில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT