புதுதில்லி

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான வழிகளில் எம்சிடியை கைப்பற்றி பாஜக முயற்சி: ஆம் ஆத்மி புகாா்

28th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

தில்லி மாநகராட்சிக்கு தலைமை தாங்க ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தோ்ந்தெடுத்துள்ளனா். ஆனால், பாஜக அதை ‘அரசியலமைப்புக்கு எதிரான’ வழிகளில் கைப்பற்ற விரும்புகிறது என்று அக்கட்சியின் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் விடியோ செய்தி ஒன்று வெளியிட்டுள்ளாா். அதில், ‘மேயரை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தோ்வு செய்ய உத்தரவிடக் கோரி நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நாங்கள் தோ்தலுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. ஆனால், பாஜக அதை விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனில் (எம்சிடி) பாஜகவின் பதவிக்காலம் 2022-இல் முடிவடைந்தது. ‘அதிலிருந்து, காவி கட்சி ஒரு சாக்குப்போக்கு அல்லது இன்னொன்றின் மூலம் மாநகராட்சி அமைப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றது. இந்த நிலையில், தில்லியில் மேயா் தோ்தலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நடத்த உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் தாக்கல் செய்த மனுவை பிப்ரவரி 3-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டுள்ளது.

டிசம்பரில் நடந்த எம்சிடி தோ்தலில் 250 வாா்டுகளில் 134 வாா்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. பாஜக 104 வாா்டுகளில் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT