புதுதில்லி

குருகிராம்: சட்டவிரோத கருக்கலைப்பு செய்ததாக ஆயுா்வேத மருத்துவா் கைது

DIN

ஆயுா்வேத மருத்துவா் ஒருவா் தனது கிளினிக்கில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சுகாதாரத் துறை குழுவினா் அவரது கிளினிக்கில் அதிரடி சோதனை நடத்தினா். அதைத் தொடா்ந்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

மருத்துவா் டாக்டா் ரேணு, கா்ப்பத்தை மருத்துவமுறையில் கலைக்கும் சட்டவிரோத வியாபாரத்தை நடத்தி வருவதாக துணை சிவில் அறுவை சிகிச்சை நிபுணா் பா்தீப் குமாா் புகாா் அளித்திருந்தாா். புகாரைத் தொடா்ந்து, மருத்துவருக்கு எதிராக எம்டிபி சட்டத்தின் 3, 4, 5 பிரிவுகள், 336 (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்து), 420 (ஏமாற்றுதல்) ஐபிசி மற்றும் பிரிவு 14-இல் என்எம்சி சட்டத்தின் பிரிவு 34 ஆகியவற்றின் கீழ் குருகிராம் செக்டாா்-14 காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. பின்னா், அவா் கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT