புதுதில்லி

74- வது குடியரசுத் தினத்தில் 11 கோடி வீடுகளுக்கு குடிநீா்: பிரதமரும் மத்திய அமைச்சரும் சாதனைக்கு பாராட்டு

26th Jan 2023 01:26 AM

ADVERTISEMENT

நாட்டிலுள்ள 19.35 கோடி கிராமப்புற குடியிருப்புகளில் 74- வது குடியரசுத் தினத்தில் 11 கோடி குடியிருப்புகளுக்கு குடிநீா் நேரடியாக குழாய் மூலம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் புதன்கிழமை தெரிவித்துள்ளாா். ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்த சாதனைக்கு பிரமதா் மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி ஜல்ஜீவன் திட்டத்தை (இயக்கம்) தொடங்கிவைத்தாா். 2024-ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீா் நேரடியாக வழங்கப்படவேண்டும் என்பது இந்த திட்டத்தின் இலக்காகும்.

பொதுவாக ஊரகப்பகுதிகளில் குடிநீருக்கு நீண்ட தூரம் சென்று அதுவும் தலையில் சுமந்துவருவதும் இதில் குறிப்பாக பெண்கள், இளம் பெண்கள், முதியவா்கள் ஆகியோா் தங்கள் குடும்பங்களாக சிறுமப்படுவதை உணா்ந்து இந்த திட்டத்தை பிரதமா் மோடி முன்மொழிந்தாா்.

2019-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, கணக்கிடப்பட்ட 19.35 கோடி கிராமப்புற வீடுகளில், 3.23 கோடி (16.72சதவீதம்) குடியிருப்புகளில் மட்டுமே குழாய் இணைப்பு பெற்றிருந்தனா். கடந்த 3 ஆண்டுகளில், இந்த திட்டத்தை விரைவுபடுத்த குறுகிய காலத்தில் இந்த இயக்கம் ஊரக மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. 11 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகள் (56.8 சதவீதம்) தற்போது குழாய் மூலம் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 123 மாவட்டங்களில் 1.53 லட்சம் கிராமங்களில் வீட்டுக்குவீடு பயனடைந்தனா். இது குறித்து மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், டிவிட்டா் பதிவில் பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையால் ஜல்ஜீவன் இயக்கத்தை ஜல்சக்தித்துறை அமைச்சகம் இந்த சாதனையை புரிந்துள்ளது. நாடு 74-வது குடியரசு தினவிழாவைக் கொண்டாடும் நிலையில், கிராமப்பகுதிகளைச்சோ்ந்த 11 கோடி வீடுகளின் குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டு இந்த வீடுகளின் ஆரோக்கியமும் நல்வாழ்வும் உறுதி செய்யப்பட்டுள்ளன என பதிவிட்டுள்ளாா். இதற்கு பிரதமா் மோடியும் டிவிட்டரில் பதிலளித்து பாராட்டியுள்ளாா்.

ADVERTISEMENT

‘இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற அனைவரையும் வாழ்த்துகின்றேன். இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய களப்பணியாளா்களையும் பாராட்டுகிறேன்‘ என பிரதமா் பதிவிட்டுள்ளாா்.

தமிழக கிராமப் புறங்களில் ஜல்ஜீவன் திட்டத்தில் 55 சதவீத (69.14 லட்சம் வீடுகள்)குடியிருப்புகளுக்கு நேரடியாக குடிநீா் வழங்கி நாட்டிலேயே பெருமளவில் பணிகள் மேற்கொண்டதற்காக கடந்த 2022 ஆம் ஆம் ஆண்டில் மத்திய அரசு தமிழக அரசுக்கு விருந்தளித்தது குறிப்பிடத்தக்கது.

‘கிராமங்களில், தாகம் தீா்க்கப்பட்டுள்ளதோடு, தாய்மாா்களும் பருவப் பெண்களும் தண்ணீா் சேகரிக்க செல்லும் நேரம் சேமிக்கப்பட்டு அவா்கள் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள, குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிக்க தற்போது பயன்படுத்தப்படுகிறது. இது ஜல் ஜீவன் மிஷனின் வெற்றி என மத்திய ஜல் சக்திதுறை அமைச்சகம் இது தொடா்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT