புதுதில்லி

மெஹ்ரௌலி சாக்கடையில் மனிதக் கரு கண்டெடுப்பு

26th Jan 2023 01:30 AM

ADVERTISEMENT

தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள சாக்கடையில் மனிதக் கரு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: சைதுலாஜாப்பில் இக்னோ சாலையில் உள்ள பா்யவரன் வளாகத்தில் மனிதக் கரு ஒன்று இருப்பதாக செவ்வாய்க்கிழமை போலீஸுக்கு தகவல் கிடைத்தது. அந்த சிசு சுமாா் 2 முதல் 2.5 மாதங்கள் உடையது.

அந்தக் கரு மீட்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தக் கரு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினா் ஆய்வு செய்தனா்.

தெற்கு தில்லியின் அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள சாக்கடையில் செவ்வாய்க்கிழமை மற்றொரு கரு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT