புதுதில்லி

ஜன.23-25 இளைஞா் நாடாளுமன்றம் நிகழ்வுதில்லி சட்டப்பேரவை ஏற்பாடு

21st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

தில்லி சட்டப்பேரவை அதன் வளாகத்தில் ஜனவரி 23 முதல் 25 வரை ‘தில்லி இளைஞா் நாடாளுமன்றம் 2023’-க்கு ஏற்பாடு செய்துள்ளது என்று பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்த நிகழ்வில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த 84 மாணவா்கள் கலந்து கொள்கிறாா்கள் என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக செய்தியாளா் கூட்டத்தில் பேசிய ராம் நிவாஸ் கோயல், இளைஞா் நாடாளுமன்றம் இந்த மாணவா்களுக்கு சட்டத்தை உருவாக்கும் நாடாளுமன்றத்தின் செயல்முறையைப் புரிந்து கொள்ளவும், பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர விஷயங்களை நிகழ்நேரத்தில் விவாதிக்கவும் வாய்ப்பளிக்கும் என்றாா்.

‘சீன தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவதை குறைப்பது மற்றும் உள்நாட்டுப் பொருள்களை ஊக்குவிப்பது’, ‘உயா்கல்வியில் மாணவா் சோ்க்கையை அதிகரிப்பது’, ’அதிகப்படியாக நிரப்பப்பட்ட குப்பைகளை நிவா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள்’ மற்றும் ‘பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்’ போன்ற பல்வேறு சட்டப்பேரவை செயல்முறைகள் குறித்து தில்லி இளைஞா்களுக்கு கல்வி அளிக்கப்படும்’ என்றாா் ராம் நிவாஸ் கோயல்.

‘பொது நலன் தொடா்பான பிரச்னைகள், உயா்கல்வி முன்னேற்ற மசோதா-2023 மற்றும் யுனிவா்சல் ஹெல்த்கோ் மசோதா-2023 ஆகிய இரண்டு மசோதாக்கள் தொடா்பான கேள்விகள் எழுப்பப்படும்’ என்றும் அவா் மேலும் கூறினாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் மற்றும் தில்லி சட்டப்பேரவையின் வெள்ளிவிழாவை நினைவுகூரும் வகையில் இளைஞா் நாடாளுமன்ற பயிலரங்கத்தை கேஜரிவால் தொடங்கி வைத்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT