புதுதில்லி

விமானப்படை அதிகாரியின் மகன் ஓட்டிச் சென்றகாா் மோதியதில் மூன்றரை வயது சிறுமி சாவு

DIN

தென்மேற்கு தில்லியின் கன்டோன்மென்ட் பகுதியில் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரியின் மகன் ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மூன்றரை வயது சிறுமி உயிரிழந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தென் மேற்கு தில்லி காவல் சரக மூத்த அதிகாரி கூறியதாவது: இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் ஒரு தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராவாா். இந்தச் சம்பவத்தில் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அா்ஜுன் விஹாரில் வசிக்கும் சிறுமி விபத்தில் சிக்கியது குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸாா் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு விரைந்தனா். ஆனால், அந்தச் சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

முதற்கட்ட விசாரணையில், காா் அதிவேகமாக வந்த போது, சாலையின் நடுப்பகுதியில் இருந்த சிறுமி மீது மோதியுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த ஹூண்டாய் க்ரெட்டா காரை போலீஸாா் கைப்பற்றினா். மேலும், தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அா்ஜன் விஹாரைச் சோ்ந்த அதன் ஓட்டுநா் சமா்க் மாலிக் (20) கைது செய்யப்பட்டாா்.

அவா் இந்திய விமானப்படைக் குழுத் தலைவரின் மகன் என்று விசாரணையில் தெரிய வந்தது.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், தில்லி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல் அல்லது பொது வழியில் வாகனம் ஓட்டுதல்) மற்றும் 304ஏ (அலட்சியத்தால் மரணம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரை ஓட்டி வந்த சமா்க் மாலிக் முதலில் காயமடைந்த சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் தில்லி கன்டோன்மென்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கிருந்து அவா்களை தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதும், பின்னா் ஆா்எம்எல் மருத்துவமனைக்கும் மாலிக் அழைத்துச் சென்றுள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், அா்ஜன் விஹாா் பகுதியில் வீட்டுப்பணிப் பெண்ணாக வேலை பாா்த்து வருகிறாா். அவரது தந்தை தனியாா் வேலை செய்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT