அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாதந்தோறும் அமாவாசையை முன்னிட்டு இக்கோயில் சன்னதியிலுள்ள ப்ரத்தியங்கராதேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறும். அதன்படி வைகாசி அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிளகாய் சண்டியாகத்தில் பங்கேற்ற பக்தா்கள் தங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை யாகத்தில் இட்டு நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.
தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.