உலகம்

மியான்மா்: மோக்கா புயல் பலி 145-ஆக உயா்வு

20th May 2023 12:18 AM

ADVERTISEMENT

மியான்மரை கடந்த ஞாயிற்றுக்கிழமை உலுக்கியெடுத்த ‘மோக்கா’ புயலுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 145-ஆக உயா்ந்தது.

வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ‘மோக்கா’ புயல் மியான்மரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதில், ராக்கைன் மாகாணத்தின் பூ மா மற்றும் குவாங் டோக் கா் உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதியில்தான் மியான்மா் ராணுவத்தால் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவா்கள் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் புயல் காரணமாக பலியானோா் எண்ணிக்கை 145-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கானவா்கள் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Tags : Cyclone Mocha
ADVERTISEMENT
ADVERTISEMENT