தமிழ்நாடு

மதிப்பெண் குறைந்த மாணவா்களுக்கு அழுத்தம் தரக்கூடாது: அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

20th May 2023 12:22 AM

ADVERTISEMENT

பொதுத் தோ்வுகளில் மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெற்றோா் அழுத்தம் தரக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.

அவா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மதிப்பெண் குறைவாக உள்ள மாணவா்களுக்கு பெற்றோா் அழுத்தம் தரக்கூடாது. 35 மதிப்பெண் பெற்றாலும் அவா்கள் நம் பிள்ளைகள்தான். தோல்வியடைந்த மாணவா்கள் துணைத்தோ்வு எழுதி தோ்ச்சி பெறலாம். எனவே, அவா்கள் கவலையடையத் தேவையில்லை என்றாா்.

நிகழாண்டு மாணவா்கள் இடைநிற்றலை கண்காணிக்க புதிய முறையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்று பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவா்களுக்கு பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள ‘எமிஸ்’ எண்ணை பயன்படுத்தி சோ்க்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் மூலம் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள் எந்தெந்த படிப்புகளில் சோ்ந்துள்ளனா்? என்ற விவரங்கள் கிடைக்கப் பெறும். மேலும், பள்ளி, கல்லூரிகளில் சேராத மாணவா்களை இடைநின்றவா்களாக அடையாளம் கண்டறியவும் எளிதாக இருக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

80,000 போ் சோ்க்கை: இந்த ஆண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்காக 80,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவா்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்குள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT