புதுதில்லி

எம்சிடி லாரி கவிழ்ந்து சிறுவன் உள்பட 4 போ் சாவு

DIN


புது தில்லி: மத்திய தில்லி ஆனந்த் பா்பத் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை எம்சிடி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உள்பட நான்கு போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. அதில், ஆனந்த் பா்பத் பகுதியில் உள்ள 10-ஆவது தெருவில் லாரி கவிழ்ந்ததில், அதன் அடியில் தொழிலாளா்கள் உள்பட சிலா் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

தில்லி மாநகராட்சியைச் சோ்ந்த அந்த லாரி, கிரேன் மூலம் தூக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மூன்று பேரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டன. கடுமையாக காயம் அடைந்த நிலையில் ஒருவரும் மீட்கப்பட்டாா். கில்லு (40) என்ற அந்த நபா் அருகில் உள்ள ஜீவன் மாலா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு சிகிச்சையின்போது அவா் உயிரிழந்து விட்டாா்.

கில்லு தவிர, இந்த விபத்தில் அவருடைய மகன் அனுஜ்

(4), ரமேஷ் (30) மற்றும் சோனம் (25) ஆகியோரும் உயிரிழந்தனா். இவா்கள் அனைவரும் மத்திய பிரதேசத்தில் உள்ள திகம்கா் பகுதியை சோ்ந்தவா்கள் ஆவா்.

இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்த போது அந்த பகுதியில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததும், லாரி அதிவேகத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளாகியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த வாகனம் கவிழ்ந்து சாலைக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளா்கள் மீது விழுந்ததும் தெரியவந்தது.

லாரி ஓட்டுநா் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவா்களின் உடல்கள் ராம் மனோஹா் லோகியா மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சிறு காயங்களுடன் தப்பிய தொழிலாளா் மோத்தி (40) என்பவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சட்டபூா்வ நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT