புதுதில்லி

தில்லி மேயா் தோ்தல்: ஆம் ஆத்மி மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

 நமது நிருபர்

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலை முன்கூட்டியே நடத்தக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் மற்றும் பலா் மீண்டும் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை (பிப்ரவரி 8) விசாரிக்க உள்ளது.

துணைநிலை ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட வல்லுநா்கள் (ஆல்டா்மேன்) தோ்தலில் வாக்களிப்பாா்கள் என்று தலைமை அதிகாரி கூறியதற்கு ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடா்ந்து தில்லி மாநகராட்சி அவைக் ட்டம் மூன்றாவது முறையாக மேயரைத் தோ்ந்தெடுக்காமல் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தை அணுகியது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஆம் ஆத்மி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி, ‘இந்த மனு மேயா் தொடா்பானது என்பதால் அவசரமாக விசாரிக்க வேண்டும். தயவு செய்து தகுதியின் அடிப்படையில் விசாரியுங்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 243ஆா் பிரிவை மீறி நியமன உறுப்பினா்கள் வாக்களிக்கட்டும் என்று அவா்கள் கூறியுள்ளனா். மேயா், துணை மேயா், நிலைக் குழு உறுப்பினா் ஆகிய மூவரும் ஒழுங்குமுறையில் நேரடித் தடையை ஏற்க வேண்டும் என்று அவா்கள் கூறுகிறாா்கள். ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு உறுப்பினா்களை ஒரு செஷன்ஸ் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குத் தண்டித்ததால் அவா்களை விலக்க வேண்டும் என்றும் கூறுகிறாா்கள். ஒரு தற்காலிக இடைக்கால நபா் இதை செயல்படுத்துகிறாா். இது ஜனநாயகப் படுகொலையாகும்’ என்றாா். அப்போது, தலைமை நீதிபதி ‘இதை நாளை விசாரணைக்கு பட்டியலிடுவோம்’ என்று கூறினாா்.

மாநகராட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 250 உறுப்பினா்களில் 134 பேரை பெரும்பான்மையாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சி, நியமன உறுப்பினா்களுக்கு வாக்குரிமை அளித்ததன் மூலம் பாஜக தனது வெற்றியை திருட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. தில்லியில் மேயா் தோ்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் உறுதி செய்யுமாறு கோரி ஷெல்லி ஓபராய் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். ஆனால், பிப்ரவரி 6-ஆம் தேதி தோ்தல் திட்டமிடப்பட்டதால் அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT