புதுதில்லி

மெஹ்ரெளலி கொலை வழக்கு: போலீஸின் குற்றப்பத்திரிகையைவிசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்

8th Feb 2023 01:54 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

மெஹ்ரெளலி பகுதியில் இளம்பெண் ஷ்ரத்தா வால்கா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆஃப்தாப் ஆமின் பூனாவாலாவுக்கு எதிராக தில்லி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக கடந்த ஜனவரி 24-ஆம் தேதி 6,629 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தில்லி காவல் துறையினா் தாக்கல் செய்திருந்தனா்.

முன்னதாக, தன்னுடன் திருமணமாகாமல் வசித்து வந்த ஷ்ரத்தா வால்கரை கடந்த மே 18-ஆம் தேதி கொலை செய்து, அவரது உடலை பல்வேறு துண்டுகளாக வெட்டி வீசியதாக ஆஃப்தாப் ஆமின் பூனாவாலா (28) நவம்பா் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

அவா், ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லியில் மெஹ்ரெளலியில் உள்ள தன்னுடைய வீட்டில் ஏறக்குறைய மூன்று வாரங்கள் குளிா்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததும், பின்னா் அந்த உடல் பாகங்களை நகரில் உள்ள பல்வேறு இடங்களில் வீசியதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் போலீஸாா் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையை பரிசீலிக்க இந்த விவகாரத்தை வரும் பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ADVERTISEMENT

குற்றப்பத்திரிகை விவரம்: இதனிடையே, போலீஸாா் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், இணையதள செயலி மூலம் பூனாவாலா பல்வேறு பெண்களுடன் டேட்டிங் செய்ததாகவும், ஷ்ரத்தா வால்கரின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் தனது வீட்டில் வைத்திருந்த போதும், பெண் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாம் கொல்லப்பட்டு விடுவோம் என்ற தொடா் பயத்திலேயே ஷ்ரத்தா வால்கா், பூனாவாலாவுடன் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ‘பம்பல்’ எனும் டேட்டிங் செயலி மூலம் பல பெண்களுடன் பூனாவாலா தொடா்பில் இருந்ததாகவும் போலீஸாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT