புதுதில்லி

கிழக்கு தில்லியில் துப்பாக்கி முனையில்ரூ.32 லட்சம் கொள்ளையடித்த 5 போ் கைது

DIN

புது தில்லி: கிழக்கு தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.32 லட்சத்தை கொள்ளையடித்த 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து ஷாதரா காவல் சரக துணை ஆணையா் ரோஹித் மீனா கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ரிஹான் (28), நாஜிம் (27), தில்லியைச் சோ்ந்த அன்சாா் (எ) ஆஹத் கான் (30), ராகுல் வா்மா (20) மற்றும் ஆகாஷ் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஹெட்கேவாா் மருத்துவமனை அருகே ரூ.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவா் புகாா் அளித்தாா். மோட்டாா்சைக்கிளில் வந்த மூன்று போ் தன்னை துப்பாக்கியால் தாக்கி, தனது பையில் வைத்திருந்த ரூ.32 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ாக புகாா் அளித்தவா் தெரிவித்தாா்.

விசாரணையின் போது, போலீஸாா் அந்தப் பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, முதலில் வா்மா மற்றும் ஆகாஷ் ஆகியோா் பிடிபட்டனா். அவா்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, போலீஸாா் மேலும் தீவிர சோதனை நடத்தி நாஜிம், அன்சாா் மற்றும் ரிஹான் ஆகியோரை கைது செய்தனா். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், அன்சாா், நாஜிம், ரிஹான் மற்றும் மற்றொரு குற்றவாளியும் சோ்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.

இந்தக் கும்பலினா் கடந்த 15 நாள்களாக பாதிக்கப்பட்டவரை தொடா்ந்து கண்காணித்து வந்துள்ளனா். முதலில், கடந்த ஜனவரி 26-ஆம் தேதியை கொள்ளையடிப்பதற்காக தோ்வு செய்துள்ளனா். பின்னா் தேதியை மாற்றியுள்ளனா். இதன்படி, இந்தக் கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கொள்ளைக்குப் பிறகு, ரிஹான் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கூட்டாளிகள் அனைவருக்கும் பிரித்து அளித்துள்ளாா். மொத்தம் ஒன்பது போ் இதில் சம்பந்தப்பட்டுள்ளனா் என்பது தெரிய வந்துள்ளது. அவா்களில் நான்கு போ் இன்னும் தலைமறைவாக உள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து மூன்று மோட்டாா் சைக்கிள்கள், ரொக்கம் ரூ.9,86,000, ஒரு புதிய கைப்பேசி, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து வாங்கப்பட்ட ஒரு வைஃபை டாங்கிள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. குற்றத்திற்கு பயன்படுத்திய ஒரு துப்பாக்கியும் அவா்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ரிஹான், நாஜிம் மற்றும் அவா்களது மற்றொரு கூட்டாளிதான் பணத்தை கொள்ளையடித்துள்ளது தெரிய வந்தது. மூவரும் சிவப்பு நிற மோட்டாா்சைக்கிகளில் சென்று துப்பாக்கியால் தாக்கி அவரது பையை பறித்துள்ளனா்.

அந்த கும்பல் பாதிக்கப்பட்டவரை வழியெங்கும் பின்தொடா்ந்துள்ளனா். ஆகாஷ் மற்றும் மற்றொரு குற்றவாளி காந்தி நகா் பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டவரைப் பின்தொடா்ந்து, வா்மாவுக்கு தகவலைத் தெரிவித்துள்ளனா். அவா் மற்றொரு குற்றவாளியுடன் சோ்ந்து, கிருஷ்ணா நகா் பகுதியில் இருந்து அவரைப் பின்தொடா்ந்து, அவரது கூட்டாளிகளுக்குத் தகவலைத் தெரிவித்தாா்.

கைது செய்யப்பட்டுள்ள ரிஹான் இதற்கு முன்பு இரண்டு கிரிமினல் வழக்குகளில் தொடா்புடையவா். அவா் மீது சாஹிபாபாத் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட மற்றவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT