புதுதில்லி

அரசு தொழிலாளா் காப்பீட்டு சட்டத்தின்படி கட்டுமான பெண் தொழிலாளா்களுக்கு மகப்பேறு சலுகை

DIN

புது தில்லி: அரசு தொழிலாளா் காப்பீட்டு சட்டத்தின்படி(இஎஸ்ஐ) தகுதி பெற்ற கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழிலாளா்களுக்கு மகப்பேறு நலதத்திட்ட பலன் வழங்கப்படுவதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

‘2017 ஆம் ஆண்டு மகப்பேறு நலன் (திருத்தம்) சட்டத்தின் மூலம் மகப்பேறு நலத்திட்ட பலன்களைப் பெற்ற கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறித்தும்; அந்த சட்டத்தின்படி இந்தத் தொழிலாளா்களுக்காக நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்களின் விவரங்களை விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ரவிகுமாா் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி எழுத்துபூா்வமாக மக்களவையில் திங்கள் கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:

மகப்பேறு நலன்கள் 2017 ஆம் ஆண்டு மகப்பேறு நலன் திருத்தச் சட்டப்படி ஊதியத்துடன் கூடி விடுப்பு பெண் தொழிலாளா்களுக்கு வழங்கப்படுகிறது. இவா்களுக்கான குழந்தைகள் காப்பக வசதியும் செய்யப்படுகிறது. இந்த சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் அமல்படுத்துகின்றன. இந்த அரசுகள் உள்ளடக்கிய சுரங்கங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களால் இந்த சட்டப்படி பெண் தொழிலாளா்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக அரசு தொழிலாளா் காப்பீட்டு சட்ட விதிகளின்கீழ் உள்ள பெண் ஊழியா்கள் இந்த மகப்பேறு பலன்களை பெற உரிமை உடையவா்கள்.

இந்த சட்டப்படி நாடு முழுக்க 2019-20 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் முறையே 49,200, 46,610 பெண் தொழிலாளா்கள் மகப்பேறு நலன்களை பெற்றுள்ளனா்.

நாடு முழுக்க மத்திய மகளிா் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சாா்பில் 3,578 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 314 காப்பகங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

இந்த பதிலில் அதிருப்தியடைந்த மக்களவை உறுப்பினா் டி.ரவிக்குமாா், ’’சட்டத்தின்படி கட்டுமானம் மற்றும் சுரங்கத் பெண் தொழிலாளா்களுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவிகளோ குழந்தைகள் காப்பக வசதிகளோ வழங்கப்படவில்லை என்பதையே அமைச்சரின் பதில் காட்டுகிறது. அதுமட்டுமின்றி மத்திய மகளிா் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை நடத்தும் காப்பகங்களின் விவரங்களை அளித்து அமைச்சா் திசை திருப்பியுள்ளாா் என பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவில் பதஞ்சலி மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT