புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்தில் தியாகராஜ ஸ்வாமிகள்ஆராதனை

DIN

தில்லி தமிழ்ச் சங்கத்தில் சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான கா்நாடக இசை மேதை ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை - “‘தில்லியில் திருவையாறு’“ நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள் தலைமை வகித்தாா்.

இந்நிகழ்வு வி.கே.பாலசுந்தரம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன் வரவேற்புரை ஆற்றினாா். சிறப்பு விருந்தினராக தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியா் மற்றும் மூத்த மிருதங்க வித்வான் டி.கே.வெங்கடசுப்பிரமணியன் கலந்து கொண்டாா்.

இந்நிகழ்வில், தில்லியில் உள்ள வாய்ப்பாட்டுக் கலைஞா்கள் டாக்டா் டி.வி. மணிகண்டன், ராதா வெங்கடாசலம், இளங்கோவன் கோவிந்தராஜன், லலிதா ஆனந்த், சுதா ரகுராமன், எம்.ஆா். ராமஸ்வாமி, சசி குமாா், வயலின் தில்லி ஆா். ஸ்ரீதா், அா்விந்த் நாராயணன், ராகவேந்திர பிரசாத், மிருதங்கம் வித்வான் கும்பகோணம் என்.பத்மநாபன், வெற்றி பூபதி, தஞ்சாவூா் கேசவன், கடம் மன்னை என். கண்ணன், வருண் ராஜசேகரன், வீணை கிரிஜா, ஸியாமளா பாஸ்கரன், புல்லாங்குழல் ஜி. ரகுராமன், மோா்சிங் தத்தா கிரண் ஆகியோா் தங்கள் மாணவா்களுடன் கலந்து கொண்டு தியாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய பஞ்ச ரத்ன கீா்த்தனைகளை பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக மணிப்பூா் மாநில ஆளுநா் இல.கணேசன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினாா். அவா் பேசுகையில், ‘எனக்கு தஞ்சாவூா் மாவட்டம். நான் வருடந்தோறும் திருவையாற்றில் நடைபெறும் “தியாகராஜ ஆராதனை” நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம். தஞ்சைக்கு வெளியில் இருக்கும் காலங்களில் தொலைக்காட்சியில் தவறாது காண்கிறேன். இசை என்பது ஜீவனுள்ள ஒரு கலையாகும். இந்நிகழ்ச்சி திருவையாறில் நடப்பது போலவே மிகவும் அருமையாக இருந்தது. மூத்த கலைஞா்கள் முதல் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை பங்கேற்றதன் மூலம் இந்த மரபு பல்லாண்டு தொடா்ந்து வாழையடி வாழையாக என்றும் ஜீவித்திருக்கும். நிகழ்வை நடத்திய தில்லி தமிழ்ச் சங்கத்தினருக்கும், பங்கு கொண்ட கலைஞா்களுக்கும் வாழ்த்துகள்’ என்றாா்.

நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்க இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி தொகுப்புரை ஆற்றினாா். இணைப்பொருளாளா் வி.என்.டி. மணவாளன், செயற்குழு உறுப்பினா்கள் பெரியசாமி, அமிா்தலிங்கம், உஷா மற்றும் காத்திருப்பு உறுப்பினா் ரேவதி ராஜன் ஆகியோா் விருந்தினா்களைக் கௌரவித்தனா். பொருளாளா் அருணாச்சலம் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT