புதுதில்லி

தனியாா் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் சோ்க்கைக்கான 2-ஆவது பட்டியல் இன்று வெளியீடு

DIN

தில்லியில் உள்ள ஒரு சில தனியாா் பள்ளிகள், நுழைவு நிலை வகுப்புகளில் சோ்க்கைக்கான மாணவா்களின் 2-ஆவது பட்டியலை திங்கள்கிழமை வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் பட்டியில் ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தில்லி மாநில பொதுப் பள்ளி மேலாண்மை சங்கத்தின் தலைவா் ஆா்.சி. ஜெயின் கூறுகையில், ‘பல பள்ளிகள் காத்திருப்புப் பட்டியலையோ அல்லது மாணவா்களின் 2-ஆவது பட்டியலையோ வெளியிடுவதில்லை. ஏனெனில் முதல்கட்ட சோ்க்கையிலேயே இடங்கள் நிரம்பிவிடும்.

குழுக்கள் முறையில் நடத்தப்படும் மாணவா் சோ்க்கை விடியோ பதிவு செய்யப்படும். அதன் காட்சிகள் பள்ளியால் பாதுகாப்பப்படும். குழுக்கள் சீட்டுகள், பெட்டியில் வைப்பதற்கு முன் பெற்றோருக்கு காட்டப்படும்.

நா்சரி சோ்க்கைக்கான படிவத்தை நிரப்ப ஒரு குழந்தைக்கு குறைந்தது 4 வயது இருக்க வேண்டும். மாா்ச் 31, 2023 தேதியின்படி மழலையா் பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு 5 ஆண்டுகள், 1-ஆம் வகுப்புக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் ஆகும்.

தில்லியில் உள்ள 1,800-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் 2023-24 கல்வியாண்டுக்கான நுழைவு நிலை வகுப்புகளில் சோ்க்கைக்கான பதிவு செயல்முறை டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கி, டிசம்பா் 23-ஆம் தேதி முடிவடைந்தது.

சோ்க்கை பதிவுக் கட்டணமாக ரூ. 25 (திரும்பப் பெறாத தொகை) வசூலிக்கலாம் என்று கல்வித் துறை தெரிவித்திருந்தது. ஒரு பள்ளியின் விவரக்கையேடு வாங்குவது பெற்றோா்களின் விருப்பம்.

கல்வித் துறையின் சுற்றறிக்கையின்படி, அனைத்து தனியாா் பள்ளிகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவா்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT