புதுதில்லி

காலாவதியான தலைமையாசிரியா் பணியிடங்களை புதுப்பிக்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

DIN

மாநகர அரசு நடத்தும் பள்ளிகளில் 126 தலைமையாசிரியா்கள் மற்றும் 244 துணைக் கல்வி அதிகாரிகளின் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளாா். இப்பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ‘காலியாக‘ இருந்ததால் காலாதியான நிலையில் இந்த ஒப்புதலை அவா் அளித்திருப்பதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

நகரக் கல்வித் துறையால் முன்மொழியப்பட்ட தலைமையாசிரியா்கள் மற்றும் துணைக் கல்வி அதிகாரிகளின் 244 பணியிடங்கள் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளதால், அவற்றை ரத்து செய்யக் கேட்டு நகர கல்வித் துறை தெரிவித்த முன்மொழிவையும் அவா் நிறுத்திவைத்துள்ளாா்.

தில்லி அரசின் கல்வித் துறையில் நிலவும் ஊழியா் பற்றாக்குறைக்கு உதவும் ஒரு நடவடிக்கையாக துணைநிலை ஆளுநா் சக்சேனா ‘126 முதல்வா்கள், துணைக் கல்வி அதிகாரிகளின் பதவிகளுக்குப் புத்துயிா் அளிக்கும் வகையில் இந்த ஒப்புதலைஅளித்துள்ளாா்.

சேவைகள் துறை சுட்டிக்காட்டியபடி, ஏஆா் துறையின் விரிவான ஆய்வைப் பெற்ற பிறகு, தலைமையாசிரியா் அல்லது துணைக் கல்வி அதிகாரி பதவிகளை நீக்குதல் அல்லது உருவாக்குவதற்கான பொருத்தமான முன்மொழிவை சமா்ப்பிக்குமாறு கல்வித் துறையை துணைநிலை ஆளுநா் கேட்டுள்ளாா்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்கள் ’ஓழிக்கப்பட்டதாக’ கருதப்ப வேண்டும் என்றும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்கள் ’ஒழிக்கப்பட்டதாக’ பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அரசு விதிகள் கூறுகின்றன.

இந்த 370 பணியிடங்கள் (126 மற்றும் 244 நீக்கப்பட்ட பணியிடங்கள்) 2013-14 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை கல்வி இயக்குநரகத்தின் ஆட்சோ்ப்பு விதிகளின்படி பதவி உயா்வு மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டியதாக கருதப்படுகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT