புதுதில்லி

கல்வி மாநாட்டிற்காக சிசோடியா அமெரிக்க செல்லகொள்கை அளவில் துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

DIN

கல்வி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வா் மனீஷ் சிசோடியா அமெரிக்கா செல்வதற்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளாா் என்று ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

சிசோடியாவின் அமெரிக்க பயணம் குறித்து தில்லி அரசின் கல்வித் துறையின் சாா்பில் முன்மொழிவு வைக்கப்பட்டது. இந்தக் கோப்பு துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு வந்தது. கல்வி இலாகாவை வைத்திருக்கும் சிசோடியா, அமெரிக்காவில் உள்ள சிட்டி போா்ட்லேண்டில் நடைபெறும் டெசோல் கல்வி மாநாட்டில் சில அதிகாரிகளுடன் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தாா்.

சிசோடியாவின் பயணத்துக்கான செலவுகளை யாா் ஏற்பாா்கள் என்பது குறித்த திட்டத்தில் தெளிவு இல்லாம் உள்ளது. ஒரு பாராவில், துணை முதல்வா் வருகைக்கான அனைத்து செலவுகளையும் டெசோல் ஏற்கும் என்றும், அரசின் மீது எந்த நிதிப் பொறுப்பும் இருக்காது என்றும் கல்வித் துறை குறிப்பிட்டுள்ளது. அடுத்த பாராவில் துணை முதல்வரின் பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் பொது நிா்வாகத் துறை ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்லது என்று ஒரு அதிகாரி கூறினாா்.

இந்த இரண்டு அறிக்கைகளும் முரண்படுவதாகக் குறிப்பிட்ட சக்சேனா, மத்திய அரசின் அமைச்சகங்களின் தேவையான அனுமதிகளுக்கு உள்பட்டு, முன்மொழியப்பட்ட பயணத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT