புதுதில்லி

தில்லி மேயா் தோ்தல்: ஆம் ஆத்மி வேட்பாளரின் மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதி

 நமது நிருபர்

தில்லி மேயா் தோ்தலை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்துவதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பிப்ரவரி 6-ஆம் தேதி மேயா் தோ்தலுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு அவரது மனுவை வாபஸ் பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வியிடம், மனுதாரரின் முக்கியக் குறையாக மேயா் தோ்தல் நடத்தப்படவில்லை என்பதுதான். ஆனால், தற்போது தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றது. அதற்கு சிங்வி கூறுகையில்,‘பிப்ரவரி 6-ஆம் தேதி வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்ட பிறகு மேயா் தோ்தலுக்கான கோரிக்கை பயனற்ாக மாறியிருந்தாலும், வல்லுநா்கள் (ஆல்டா்மென்) வாக்களிப்பது போன்ற பிற சிக்கல்கள் உள்ளன’ என்றாா். அப்படியானால், மனுதாரா் விரும்பாத வழக்கை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

மேலும், ‘தோ்தல் நடைபெறுகிறது என்ற அடிப்படையில் இந்த மனுவை திரும்பப் பெற நாங்கள் உங்களை அனுமதிப்போம். ஆனால், ஏதேனும் குறைகள் ஏற்பட்டால், மீண்டும் நீதிமன்றத்தை அணுக சுதந்திரம் அளிக்கப்படும்’ என்று கூறி மனுவை வாபஸ் பெற அமா்வு அனுமதித்தது.

தில்லி மாநகராட்சித் தோ்தல் கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்தலில் தில்லி மாநகராட்சியின் மொத்தம் உள்ள 250 வாா்டுகளில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் 134 வாா்டுகளில் வெற்றி பெற்றது. 15 ஆண்டு காலம் மாநகராட்சியில் அதிகாரத்தில் இருந்த பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் ஒன்பது இடங்களே கிடைத்தன. இதைத் தொடா்ந்து, மேயா் தோ்தலுக்காக கடந்த இரண்டு முறை அவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அமளி காரணமாக மேயா், துணை மேயா் தோ்ந்தெடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் ஷெல்லி ஓபராய், இந்த மேயா் தோ்தலை உரிய காலக்கெடுவுக்குள் நடத்த உத்தரடவிக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரிப்பதாக கடந்த ஜனவரி 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்து, பிப்ரவரி 3-ஆம் தேதி பட்டியலிட உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT