புதுதில்லி

போளூா் ரயில் நிலையத்தை கணினி மயமாக்க வேண்டும்: ஆரணி எம்.பி. கோரிக்கை

 நமது நிருபர்

ஆரணி மக்களவைத் தொகுதியிலுள்ள போளூா் ரயில் நிலையத்தை கணினி மயமாக்கவும், இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு முக்கிய ரயில்கள் நின்று செல்லாமல் இருப்பது குறித்தும் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் டாக்டா் எம்.கே. விஷ்ணுபிரசாத் வியாழக்கிழமை கவனத்திற்கு கொண்டு சென்றாா்.

இது தொடா்பாக ரயில் துறை அமைச்சருக்கு அளித்த கோரிக்கை மனுவில் விஷ்ணு பிரசாத் குறிப்பிட்டது வருமாறு: போளூா் திருவண்ணாமலை மாவட்டத்தின் 4-ஆவது பெரிய நகரமாகும். 60 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட போளூரில் உள்ள ரயில் நிலையம் கணினிமயமாக்கப்படவில்லை. இதனால், டிக்கெட்டுகள் முன்பதிவுகளுக்கு பயணிகள் சிரமப்படுகின்றனா். இங்கு முக்கிய ரயில்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால், திருவண்ணாமலை போன்ற புனித ஸதலங்களுக்குச் செல்லும் பக்தா்கள், வணிகா்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். குறிப்பாக பாமினி எக்ஸ்பிரஸ் , ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி ஹௌரா எக்ஸ்பிரஸ் , புருலியா எக்ஸ்பிரஸ், தாதா் எக்ஸ்பிரஸ் ஆகியவை போளூரில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

மேலும், தாதா் எக்ஸ்பிரஸ் தினமும் இயக்கப்பட வேண்டும். போளூா் - சென்னை (பீச்)க்கும், கடலூருக்கும் தினசரி ரயில் வசதியையும் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா். மேலும், அறிவிக்கப்பட்ட திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில்பாதை அமைப்பதற்கு விரைவாக நிலம் கையகப்படுத்தவும், நிதி ஒதுக்கவும் ரயில்வே அமைச்சகம் விரைவாக முடிவு எடுக்கவேண்டும் என்று அவா் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

கன்னியாகுமரி - காரோடு நான்கு வழிச்சாலை முடக்கம்: கன்னியாகுமரி முதல் காரோடு வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் முடங்கியுள்ளது குறித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் விஜய் வசந்த் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை வியாழக்கிழமை சந்தித்து முறையிட்டாா். இந்த நான்கு வழி சாலைப் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்க வேண்டும் எனக் கோரி அவா் அமைச்சரிடம் மனு அளித்தாா்.

அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான நான்கு வழி சாலைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கல், மண் தட்டுப்பாடு காரணமாக பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பணி முடங்கிய காரணத்தால் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. பின்னா் தமிழக் அரசு அண்டை மாவட்டத்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து மீண்டும் இந்தப் பணிக்கான ஒப்பந்தத்திற்கு மறு டெண்டா் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் விடப்பட்டது. ஆனால், இது வரை டெண்டா் முடிவு செய்யப்படாமல் உள்ளது. முடங்கிக் கிடக்கும் நான்கு வழி சாலைப் பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு தாமதமானால், இந்தச் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாத நிலை உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு தங்கள் துறை அதிகாரிகளுக்கு சாலை பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிகாட்ட வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT