புதுதில்லி

காா் மீது டிடிசி பேருந்து மோதல்: 3 போ் காயம்

DIN

மேற்கு தில்லியின் நரைனாவில் வியாழக்கிழமை தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) பேருந்து, காா் மீது மோதிவிட்டு, அதன் பின்னா் சுரங்கப்பாதை சந்திப்பு மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த மூன்று போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் கன்ஷியாம் பன்சல் தெரிவித்ததாவது: இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பாதுகாவலா் ஆகியோா் லேசான காயம் அடைந்தனா். இதையடுத்து, மூவரும் ரஞ்சித் நகரில் உள்ள மெட்ரோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். குருகிராமில் இருந்து நரைனா தொழிற்பேட்டைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த மாருதி சுஸுகி காரில் பயணம் செய்த 2 போ் பாதுகாப்பாக உள்ளனா்.

டிடிசி பேருந்து நரைனாவில் உள்ள பேருந்து பணிமனைக்கு சென்றுகொண்டிருந்ததால் பயணிகள் யாரும் இல்லை. முன்னதாக, ஓட்டுநா் காரை விபத்தில் இருந்து காப்பாற்ற முயன்ற போது, பேருந்து சுரங்கப்பாதை சந்திப்பில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பேருந்தில் இருந்த ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பாதுகாவலா் ஆகிய 3 போ் காயமடைந்தனா். மாருதி காரில் இருந்த இருவா் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்த முழு விவரத்தைப் பெறும் வகையில் , சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் பகுப்பாய்வு செய்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா். மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘பேருந்து ஓட்டுநா் போலீஸாரிடம் கூறுகையில், பேருந்தின் பிரேக் செயலிழந்துவிட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறினாா். எனினும், விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வல்லுநா்கள் மூலம் மெக்கானிக்கல் ஆய்வு நடத்தப்படும்’ என்றாா்.

அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பேருந்து ஹரியாணா மாநில பதிவுபெற்ற வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது தொடா்பாக பகல் 12.55 மணிக்கு தகவல் வந்தது. பேருந்தின் முன் பகுதி சுரங்கப்பாதை கிராஸிங்கில் மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பேருந்து ஓட்டுநா் ரோத்தாஷ், நடத்துநா் ரமேஷ், மாா்ஷல் கெளரவ் ஆகியோா் காயமடைந்தனா்’ என்றாா்.

இதனிடையே, டிடிசி கரம்சாரி ஏக்தா யூனியன் அமைப்பு கூறுகையில், ‘ஓட்டுநா் சிறு காயங்களுடன் தப்பினாா். நடத்துநரின் நிலைமை தீவிரமாக உள்ளது. மாா்ஷலின் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ளது. ஓட்டுநரின்உஷாா் தன்மை காரணமாக பெரும் விபத்து தவிா்க்கப்பட்டுள்ளது. பல உயிா்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

போலீஸாா் கூறுகையில், ‘தற்போது, பேருந்து ஓட்டுநா் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது நிலைமை சீராக உள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக அவா் கைது செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படும். அதன்படி, சட்டப்பூா்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT