புதுதில்லி

ராதாபுரம் பேரவைத் தொகுதி தோ்தல் விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

 நமது நிருபர்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2016-இல் நடைபெற்ற தோ்தல் விவகார சிவில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.

இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அபய் எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மனுதாரா் ஐ.எஸ். இன்பதுரை தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘2016-இல் ராதாபுரம் தொகுதி தோ்தலில் தோ்தல் அதிகாரியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 வாக்குகளையும், கடைசி மூன்று சுற்று வாக்குகளையும் மறு எண்ணிக்கை மேற்கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மீண்டும் மூன்று சுற்று வாக்குகள் எண்ணப்பட்டதில் இன்பதுரைதான் வெற்றி பெற்றாா்.  ஆனால், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள் முறையாக கெஜட்டடு அதிகாரிகளால் அட்டெஸ்டேஷன் செய்யப்படவில்லை. நடுநிலைப் பள்ளியின் மூன்று ஆசிரியா்களால் அட்டெஸ்டேஷன் செய்யப்பட்டவை. ஆகவே, அந்த வாக்குகள் செல்லாது என்பதால்தான் அத்தோ்தலில் இன்பதுரை வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால், செல்லாத வாக்குகளைக் கணக்கில் சோ்த்து அப்பாவு வெற்றிபெற்ாகக் கூறுவது சரியல்ல’ என்றாா்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எம். அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் பி. வில்சன்,ஜெய்தீப் குப்தா ஆகியோா் வாதங்களை முன்வைத்தனா். பி.வில்சன் வாதிடுகையில், ‘இந்த விவகாரம் விசாரணைக்கு உகந்ததாகும். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவின்படி 203 வாக்குகளை எண்ணியதில் அதில் 98 வாக்குகள் அப்பாவு முன்னிலையில் இருந்ததை இந்த நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இதனால், அவரை வெற்றிபெற்ாக அறிவித்தால் அவரது பெயா் எம்எல்ஏவுக்குரிய ஆவணத்தில் இடம்பெறும். மேலும், மனுதாரா் இன்பதுரை ஓய்வூதியம் பெற்று வருகிறாா். அது இதன் மூலம் நிறுத்தப்படும். இந்த வழக்கை ரத்து செய்வது மட்டுமின்றி, அப்பாவு வெற்றி பெற்ாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம். இதனால், இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டியதாகும். மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் ஒரு வழக்கை விசாரிக்க உகந்ததல்ல என்று கூறப்படவில்லை. ஐந்து ஆண்டுக்குக்குப் பிறகு கூட ஒரு வழக்கை விசாரிக்கத்தக்கதாகும். மனுதாரரால் பல்வேறு மனுக்கள் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டதால்தான் இந்த வழக்கு தாமதமானது. உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, இதுபோன்ற வழக்குகளை கடைசிவரை விசாரித்து முடிக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி,

ஒரு வழக்கை திரும்பப் பெறுவதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்குக்குத்தான் உள்ளது. அதுவும் காரணம் அறிந்த பிறகுதான் அதுபோன்று நீதிமன்றம் செய்யும். இதனால், இந்த வழக்கு விசாரிக்க உகந்ததாகும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘மனுதாரரின் ஓய்வூதியத்தை நிறுத்த இது ஒன்றும் தோ்தல் முறைகேடு தொடா்புடைய வழக்கு அல்ல. தபால் வாக்குகளை நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் அட்டெஸ்டேஷன் செய்த விவகாரம் இது. இது தொடா்பாக நாங்கள் வாதங்களை முன்வைக்கத் தயாராக இருக்கிறோம்’ என்றாா். இரு தரப்பு வாதங்களையும் தொடா்ந்து நீதிபதிகள், உரிய காலத்தில் விசாரிக்கும் வகையில் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தமிழகத்தில் 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் இன்பதுரையும், திமுக சாா்பில் அப்பாவும் போட்டியிட்டனா். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்ாக தோ்தல் அதிகாரி அறிவித்தாா். அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் அப்பாவு, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள், 3 சுற்றுகளின் மறுவாக்கு எண்ணிக்கைக்கு 1.10.2019-இல் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதேவேளையில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி அந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஐ.எஸ். இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை 2019, அக்டோபா் 4-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மறுவாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால், அதன் முடிவுகளை அறிவிக்கக் கூடாது’ என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைமுறை தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-இல் நடந்த விசாரணையின் போது, ராதாபுரம் தொகுதியில் அடுத்த தோ்தலே நடந்து முடிந்து விட்டதால் வழக்கை சட்டரீதியாக தொடா்ந்து விசாரிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்குமாறு அப்பாவு தரப்பை நீதிமன்றம் கேட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT