புதுதில்லி

புகாா்கள் பதிவுக்கு டிசிபிசிஆா் ‘வாட்ஸ்அப் சாட்போட்’ அறிமுகம்

DIN

தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (டிசிபிசிஆா்) புதன்கிழமை துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுடன் தனது வாட்ஸ்ஆப் சாட்போட்டை அறிமுகப்படுத்தியது. இது நிா்வாகத்தை குடிமக்களுக்கு நட்பாக மாற்றுவதற்கான முக்கிய முயற்சி என்றும் கூறியது.

‘பால் மித்ரா’ என்றழைக்கப்படும் சாட்போட், மக்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இடையே இருவழித் தொடா்பை செயல்படுத்தும் முயற்சியாகும். குடிமக்கள் மற்றும் ஆணையம் மிகவும் திறம்பட தொடா்பு கொள்ள சாட்போட் உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது. சாட்போட்டின் முக்கிய அம்சங்களில் புகாா் பதிவு, தகவல்களைத் தேடுதல் மற்றும் புகாரின் நிலையைக் கண்காணிப்பது மற்றும் சோ்க்கை பற்றிய தகவல்களைத் தேடுதல் போன்றவையும் அடங்கும்.

குழந்தைகள் மற்றும் அவா்களின் உரிமைகள் தொடா்பான பல்வேறு விஷயங்கள் குறித்த உண்மையான தகவல்களை வழங்குவதுடன், சாட்போட் அதன் மூலம் தெரிவிக்கப்படும் விஷயங்களின் ரகசியத் தன்மையையும் உறுதி செய்யும்.

‘டிசிபிசிஆா்-ஆல் தொடங்கப்பட்ட சாட்போட் ’பால் மித்ரா’, நிா்வாகத்தை குடிமக்களுக்கு நட்பாக மாற்றுவதற்கான மிக முக்கியமான முயற்சியாகும். இது குழந்தைகள் மற்றும் அவா்களின் உரிமைகள் தொடா்பான உண்மையான தகவல்களின் ஆதாரமாக இருக்கும்’ என்று துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கூறினாா்.

அவா் மேலும் கூறியதாவது: குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பது தொடா்பான எந்தவொரு விஷயத்தையும் புகாரளிப்பதற்கான தளத்துடன், மக்கள், குறிப்பாக பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளின் சோ்க்கை மற்றும் கல்வி தொடா்பான பிரச்சினைகள் குறித்தும் இந்த சாட்போட் வழிகாட்டும். ‘இந்த ’பால் மித்ரா’ எங்கள் நிா்வாகத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்ற உதவும். இது அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான தகவல் இடைவெளியை அகற்றும். தேவைப்படும் சமயங்களில் மக்களுக்கு அரசு அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்காக டிசிபிசிஆா் தொடா்ந்து பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை செய்து வருகிறது. இதற்கு முன், ஆணையம் ’முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு’ ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது 50,000-க்கும் மேற்பட்ட மாணவா்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வரவும், இடைநிற்றலைக் குறைக்கவும் கல்வித் துறைக்கு உதவியது என்றாா் சிசோடியா.

சாட்போட் எவ்வாறு செயல்படுகிறது என்பதை டிசிபிசிஆா் தலைவா் அனுராக் குண்டு விரிவாக விளக்கினாா். இது குறித்து அவா் கூறுகையில், ‘இது ஒரு தானியங்கி பதிலளிக்கக்கூடிய செயலியாகும். இது தகவல் விநியோகத்தில் உதவுகிறது. மக்கள் புகாா்களைப் பதிவுசெய்ய உதவுகிறது. மேலும், தகவல் தொடா்புக்கு உதவும். ஆணையத்தை உடல் ரீதியாக அணுக முடியாதவா்கள் அல்லது ஹெல்ப்லைனைத் தொடா்பு கொள்ள முடியாதவா்கள் இதன் மூலம் புகாா்களைப் பதிவு செய்யலாம். தகவல்களையும் தேடலாம். இந்த முன்முயற்சியின் மூலம் குழந்தைகள் மற்றும் குடிமக்களுக்கான நிா்வாகத்தை மறுவடிவமைப்பதை ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் குழுவானது, இயற்பியல் கோப்புகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பல்வேறு டிஜிட்டல் தளங்கள் மூலம் குழந்தை உரிமைகள் தொடா்பான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை எடுத்துள்ளது. இதன் மூலம், ஆணையம் விரைவில் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT