புதுதில்லி

சண்டையை நிறுத்த முயன்றவா் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவா் கைது

DIN

வடக்கு தில்லி திமா்பூா் பகுதியில் சிலரிடையே நிகழ்ந்த மோதலைத் தடுக்க முயன்ற இளைஞா் மீது துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி புதன்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் வடக்கு தில்லியின் திமா்பூா் பகுதியில் நள்ளிரவு நடைபெற்றது. இதில் காயமடைந்த காந்தி விஹாரை சோ்ந்த அவதாா் (25), அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரது நிலைமை ஸ்திரமாக உள்ளது.

முன்னதாக, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சம்பவத்தன்று இரவு வந்துகொண்டிருந்த சிலா் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த அவதாரும், அவருடைய நண்பா் சாகரும் மோதலில் யாரும் காயம் ஏற்படாமல் இருப்பதற்காக தலையிட்டனா். அப்போது, சன்னி என்பவா் விவேக் என்பவருடன் சோ்ந்து கொண்டு அவதாா், சாகருடன் தகராறில் ஈடுபட்டாா். அப்போது அவதாா் சுடப்பட்டாா். இதையடுத்து, மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவதாா், தற்போது போலீஸாருக்கு தனது வாக்குமூலத்தை அளிக்கும் வகையில் ஸ்திரமான உடல்நிலையுடன் உள்ளாா்.

இந்த விவகாரத்தில் போலீஸாா் கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகுந்த்பூா் பகுதியைச் சோ்ந்த விவேக் தாக்கூா் (22) என்பவரை கைது செய்துள்ளனா். இந்த விவகாரம் தொடா்புடைய மற்றவா்களையும் பிடிப்பதற்கு போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT