புதுதில்லி

வருமான வரியாக கொடுத்தது ரூ.1.75 கோடி: தில்லிக்கு கிடைத்தது வெறும் ரூ.325 கோடி - பட்ஜெட் குறித்து கேஜரிவால்

2nd Feb 2023 01:59 AM

ADVERTISEMENT

கடந்த ஆண்டு ரூ.1.75 லட்சம் கோடிக்கு மேல் வருமான வரி செலுத்திய போதிலும், 2023-24-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.325 கோடி மட்டுமே தேசியத் தலைநகா் தில்லிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் கேஜரிவால் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு தேசியத் தலைநகா் மீது மாற்றாந்தாய் மனப்போக்குடன் இருப்பதாக குற்றம் சாட்டிய அவா், பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய இரட்டைப் பிரச்னைகளில் இருந்து இந்த பட்ஜெட் எந்த நிவாரணமும் அளிக்கவில்லை என்றாா்.

‘தில்லி மக்களை மத்திய அரசு மீண்டும் மாற்றாந்தாய் மனப் போக்குடன் கையாண்டுள்ளது. தில்லி மக்கள் கடந்த ஆண்டு ரூ.1.75 லட்சம் கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தியுள்ளனா். அதில் ரூ.325 கோடி மட்டுமே தில்லியின் வளா்ச்சிக்காக பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளது. இது தில்லி மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி’ என்று கேஜரிவால் தனது ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்திற்கு நிவாரணம் இல்லை. மாறாக, இந்த பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும். வேலையில்லா திண்டாட்டத்தை அகற்றுவதற்கு எந்தவித உறுதியான திட்டமும் இல்லை. கல்விக்கான பட்ஜெட்டை 2.64 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பது துரதிருஷ்டவசமானது. சுகாதார பட்ஜெட்டை 2.2 சதவீதத்தில் இருந்து 1.98 சதவீதமாக குறைத்துள்ளது தீங்கு விளைவிக்கும்’” என்றாா்.

ADVERTISEMENT

மக்களவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT